15 வருஷம்... திருமண நாளில் கணவருடன் சேர்ந்து கலக்கல் போட்டோவை வெளியிட்ட ஜோதிகா.. குவியும் வாழ்த்து!
சென்னை: 15வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பையை பூவிகமாக கொண்டவர் நடிகை ஜோதிகா. டோலி சஜா கே ரக்னா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார்.
பின்னர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

முன்னணி நடிகர்களின் படங்கள்
வாலி படத்தில் சிறு கதாப்பாத்தில் சில நிமிட காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார் ஜோதிகா. பின்னர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார் ஜோதிகா. அதன்பிறகு அஜித்துடன் முகவரி விஜய்யுடன் குஷி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார் ஜோதிகா.

சூர்யாவுடன் அதிக படங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா 2016ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். தமிழில் சூர்யாவுடன் அதிக படங்களில் நடித்துள்ளார் ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட 7 படங்களில் நடித்துள்ளார் ஜோதிகா.

செப்டம்பர் 11ஆம் தேதி
இந்நிலையில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடிகர் சூர்யாவை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சினிமா பிரபலங்கள் ஒன்றாக படங்களில் இணைந்து நடிக்கும் போது அவர்களுக்குள் காதல் மலர்வதும் திருமணம் செய்து கொள்வதும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல.

நல்ல ஜோடி பொருத்தம்
ஆனால் நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் காதலிப்பதாக தகவல் பரவியதுமே அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் நல்ல ஜோடி பொருத்தம் என்றும் சொல்லாத ரசிகர்களே இல்லை. ரசிகர்களின் விருப்பப்படியே கோலாகலமாக நடந்து முடிந்தது சூர்யா ஜோதிகாவின் திருமணம்.

மனைவிக்கு முக்கியத்துவம் தரும் சூர்யா
திருமணம் நடந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருவருக்கும் இடையிலான காதல் துளியும் குறையவில்லை. இருவரும் ஒருவரின் வளர்ச்சிக்கு ஒருவர் என உறுதுணையாக இருந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு மனைவி சினிமாவில் நடிக்க பல நடிகர்கள் தடை போட்டு வரும் நிலையில் தனது மனைவிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வைத்து வருகிறார் சூர்யா.

இரண்டு குழந்தைகள்
திருமணத்திற்கு பிறகும் தனக்கும் தனது புகுந்த வீட்டுக்கும் குறை ஏற்படாத வகையில் நடந்து கொள்கிறார் ஜோதிகா. சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தேவ் என்ற மகனும் தியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சூர்யா - ஜோதிகா தம்பதி, இன்று தங்களின் 15வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

அன்புக்கும் ஆசிகளுக்கும் நன்றி
இதனை முன்னிட்டு தனது கணவரும் நடிகருமான சூர்யாவுடன் இருக்கும் போட்டோவை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவுக்கு 15 வருட மகிழ்ச்சி. அனைவரின் அன்புக்கும் ஆசிகளுக்கும் நன்றி என பதிவிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

க்யூட்டஸ்ட் கப்பிள் எவர்
மேலும் இருவருக்கும் இடையிலான இந்த அன்பு எப்போதும் குறையவே கூடாது என்றும் கூறி வருகின்றனர். க்யூட்டஸ்ட் கப்பிள் எவர், வெரிகுட் பேர் என்றும் இருவரும் தங்கள் தொழிலில் மேலும் பல வெற்றிகிளை குவிக்க வேண்டும் என்றும் வாழ்த்தி வருகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











