Actress Jyothika: சைத்தான் படத்தின் பிரமோஷன்.. சூப்பர் லுக்கில் வந்த ஜோதிகா!
சென்னை: நடிகை ஜோதிகா தமிழில் வாலி படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பல ஆண்டு காலங்கள் கழித்து தற்போது மீண்டும் பாலிவுட்டில் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ஜோதிகா, ஒரு கட்டத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் ஆகி சில ஆண்டுகள் நடிக்காமல் ஒதுங்கியிருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டிலும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது சைத்தான் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக இரு குழந்தைகளுக்கு தாயாக ஜோதிகா நடித்துள்ளார். படத்தில் மாதவன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். படம் ஆக்சன் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள நிலையில் நான் தான் சைத்தான் என்று சமீபத்தில் மாதவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் போஸ்டருடன் பதிவிட்டார். இதன் மூலம் கதையை ரசிகர்கள் ஓரளவுக்கு யூகித்தனர். விகாஸ் பாஹல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

நடிகை ஜோதிகா: நடிகை ஜோதிகா ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் வாலி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். முதல் படத்திலேயே அஜித், சிம்ரன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணையும் வாய்ப்பை அவர் பெற்றிருந்தார். இந்த படத்தில் அவரது பிரஷ்ஷான லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தடுத்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் இந்த படம் பெற்றுக் கொடுத்தது. அஜித்துடனே அடுத்தடுத்த படங்களிலும் ஜோதிகா நடித்திருந்தார். சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடி கோலிவுட்டில் மிகவும் பிரபலமானது.
சூர்யா -ஜோதிகா ஜோடி: இவர்கள் இருவரும் இணைந்து அதிகமான படங்களில் நடித்ததுடன் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து ஆறு ஆண்டுகள் நடிக்காமல் தன்னுடைய குடும்பம், குழந்தைகளை கவனித்து வந்தார் ஜோதிகா. தொடர்ந்து 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் தமிழில் தன்னுடைய என்ட்ரியை தொடங்கினார். அடுத்தடுத்து இவரது படங்கள் அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமைந்து வருகின்றன. சமீபத்தில் மலையாளத்தில் காதல் தி கோர் என்ற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் ஜோதிகா. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை மற்றும் ரீ-என்ட்ரியை மலையாளத்தில் பெற்றுக் கொடுத்துள்ளது.
பாலிவுட்டில் ரீ-என்ட்ரி: இதேபோல அதிகமான இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பாலிவுட்டில் கால் பதித்துள்ளார் ஜோதிகா. சைத்தான் என்ற படம் மூலம் மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக மனைவியாக நடித்துள்ளார் ஜோதிகா. இந்த படத்தில் மாதவன் வில்லனாக நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் ப்ரோமோஷனையொட்டி வெளியான போஸ்டர் ஒன்றில் நான்தான் சைத்தான் என்று அவர் கதையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
கோட் சூட்டில் ஜோதிகா: இதனிடையே இந்தப் படத்தின் பிரமோஷனின்போது நடிகை ஜோதிகா கோட் சூட்டில் கலந்துக் கொண்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் பிரமோஷன்கள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இந்த படத்தின்மூலம் நீண்ட நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ஜோதிகா நடித்துள்ளது அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











