Jyothika: 15 கிலோ வரை எடை குறைத்த ஜோதிகா.. அரசியல் குறித்து க்ளியராக சொன்ன ஜோ!
சென்னை: நடிகை ஜோதிகா அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பிசியான நடிகையாக இருந்தவர். ஒருகட்டத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். சில காலங்கள், தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகள் என இருந்த ஜோதிகா, மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.
இந்தப் படம் ஜோதிகாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் தொடர்ந்து தன்னுடைய சொந்த தயாரிப்பிலும் மற்றவர்கள் தயாரிப்பிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன், அஜய் தேவ்கன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஜோதிகா பாலிவுட்டில் நடித்திருந்த ஷைத்தான் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து, சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

நடிகை ஜோதிகா: நடிகை ஜோதிகா விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் தமிழில் நடித்து முன்னணி ஹீரோயினாக இருந்தவர். தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகாவிற்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திருமணம், குழந்தைகள் என அடுத்தடுத்து விஷயங்களால் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த ஜோதிகா, தொடர்ந்து 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் ஜோதிகா நடித்து வருகிறார்.
ஜோதிகா ரீ-என்ட்ரி: அனைத்து மொழிகளிலும் இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களாக மாறி வருகின்றன. மலையாளத்தில் சமீபத்தில் மம்மட்டியுடன் இணைந்து ஜோதிகா நடித்து வெளியான காதல் த கோர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஜோதிகாவின் நடிப்பும் பாராட்டுக்னகளை பெற்றது. இதனிடையே பாலிவுட்டிலும் 26 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வெற்றியை சிறப்பாக ஷைத்தான் படம் மூலம் கொடுத்துள்ளார் ஜோதிகா. இந்த படம் சர்வதேச அளவில் 200 கோடிகளுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் இன்று முதல் இந்த படம் ஓடிடியிலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: இந்நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஜோதிகா. தொடர்ந்து தனியாகவும் சூர்யாவுடன் இணைந்தும் அடுத்தடுத்த பிட்னஸ் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் 15 கிலோ வரை எடை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜோதிகா ஃபிட்னஸ் ரகசியம்: பெண்கள் நாள்தோறும் தங்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஜோதிகா கூறியுள்ளார். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, தற்போது ஃபிட்னசில் ஆர்வமாக செயல்பட்டு வருவதால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாம் நம்முடைய தினசரி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினாலே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்றும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











