அறையில் போஸ்டர் ஒட்டி அழகு பார்த்த ரசிகை.. 150வது பட தயாரிப்பாளர்.. அக்ஷய் குறித்து ஜோதிகா உற்சாகம்!
சென்னை: நடிகர் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியான சூரரைப் போற்று படம், தற்போது சர்ஃபிரா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படத்தில் அக்ஷய் குமார், ராதிகா மதன் உள்ளிட்டவர்களின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் சூர்யாவும் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சர்ஃபிரா படம் திரையரங்குகளில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள நிலையில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள இந்தியன் 2 படத்தை தாண்டி இந்தப்படம் வெற்றி பெறுமா என்பதை இன்னும் சில தினங்களில் பார்க்க முடியும். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான ஜோதிகா அக்ஷய் குமாருக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சூரரைப் போற்று படம்: நடிகர் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் கடந்த 2020ம் ஆண்டில் ஓடிடியில் வெளியான படம் சூரரை போற்று. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து தேசிய விருதுகளையும் குவித்தது. இந்நிலையில் இந்த படம் தற்போது பாலிவுட்டில் அக்ஷய் குமார், ராதிகா மதன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படத்தை சுதா கொங்கராவே இயக்கியுள்ள நிலையில் இன்றைய தினம் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தியன் 2 படத்துடன் சர்ஃபிரா படமும் மோதியுள்ள நிலையில் இந்தியன் 2 அலையில் சர்ஃபிரா படம் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்துமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

அக்ஷய்க்கு ஜோதிகா வாழ்த்து: சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்து இன்றைய தினம் ரிலீஸ் செய்துள்ளார். படததில் சூர்யாவும் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள அக்ஷய் குமாருக்கு நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கும் படத்தில் மனதை உலுக்கும் வகையிலான அக்ஷய் குமாரின் நடிப்புக்கும் அவர் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
ரசிகை.. தயாரிப்பாளர்: மேலும் தன்னுடைய படுக்கை அறையில் அக்ஷய் குமாரின் போஸ்டரை ஒட்டி அழகு பார்த்த ரசிகை என்ற நிலையிலிருந்து தற்போது அக்ஷய் குமாரின் சிறப்பான 150வது படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் என்ற நிலைக்கு தான் உயர்ந்துள்ளதாக ஜோதிகா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு அனைவரையும் கவர்ந்த நிலையில், படத்திற்கு போதிய அளவில் பிரமோஷன்களை படக்குழுவினர் கொடுக்கத் தவறியதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கலவையான விமர்சனங்கள்: இந்தப்படத்தின் பிரமோஷன்களில் இயக்குநர் சுதா கொங்கரா பங்கேற்கவில்லை. சூர்யாவின் படத்தை சுதா கொங்கரா இயக்கவிருந்த நிலையில், படத்திற்கு புறநானூறு என்று பெயரும் வைக்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் டிராப்பாகியுள்ளது. இதுவும் சுதா கொங்கரா சர்பிஃரா படத்தின் பிரமோஷன்களில் பங்கேற்காததற்கு காரணங்களாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சூரரைப் போற்று படத்தில் சூர்யா மற்றும் அபர்ணா முரளியின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்த நிலையில், அது தற்போது சர்ஃபிரா படத்தில் அக்ஷய் மற்றும் ராதிகா மதனிடம் மிஸ்ஸிங் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











