Actress Jyothika: சூர்யா படங்களில் பெண்கள் கொண்டாடப்படுகின்றனர்.. ஜோதிகா பெருமிதம்

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா சேர்ந்த நடித்து காதலித்து திருமணமும் செய்துக் கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

Actress Jyothika hails that in 80% of Suriyas movies Heorines get equal characters

சமீபத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து நடித்துள்ள காதல் தி கோர் படம் வெளியாகி மிகப்பெரிய விமர்சனங்களை பெற்றுள்ளது.

நடிகை ஜோதிகா: நடிகை ஜோதிகா வாலி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இந்தப் படத்தில் சிறிது நேரம்தான் அவர் வருவார். ஆனால் தன்னுடைய க்யூட் மற்றும் துறுதுறு நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து கமல், ரஜினி, விஜய், சூர்யா, அஜித் என அனைவருடனும் நடித்து கலக்கினார். முன்னணி நடிகையாக வலம் வந்தார். 5 ரூபாய் கொடுத்தால் 50 ரூபாய்க்கு நடிப்பார் என்ற விமர்சனம் ஜோதிகா குறித்து சொல்லப்படுவதுண்டு.

மிரட்டிய ஜோதிகாவின் நடிப்பு: அதற்கேற்றாற்போல குஷி, சந்திரமுகி உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பில் மிரட்டின. இதனிடையே நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலான ஜோதிகா, சில ஆண்டுகள், குடும்பம் குழந்தைகள் என்று நடிப்பிலிருந்து விலகியிருந்தார். மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில் தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார்.

காதல் தி கோர் படம்: சமீபத்தில் மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான காதல் தி கோர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இந்தக் கதையை கேட்டு, ஜோதிகாவின் குழந்தைகளே அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதாக சமீபத்திய தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தான் 25 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துவருவதை சுட்டிக் காட்டிய ஜோதிகா, ஒரு விஷயம் மட்டும் தனக்கு பிடிக்காமல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரக்டர் கவனிக்கப்பட வேண்டும்: இப்பொழுதும் தனக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் வருவதாகவும் ஆனால் முன்னணி ஹீரோக்களுக்கு நாயகி என்ற விஷயம் மட்டும் தனக்கு போதுமானதல்ல என்றும் ஜோதிகா தெரிவித்துள்ளார். சில சீன்களே இருந்தாலும் தன்னுடைய கேரக்டர் கவனிக்கப்பட வேண்டும் என்றும் அப்படி இல்லாத கேரக்டரை ஏற்பதை மரியாதைக் குறைவாக தான் கருதுவதாகவும் ஜோதிகா மேலும் கூறியுள்ளார். தன்னுடைய கணவர் நடிப்பில் வெளியான 80 சதவித படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சூர்யா படத்தில் கொண்டாடப்படும் நாயகிகள்: சினிமாவில் லைலா நடிப்பில் வெளியான பெஸ்ட் படங்கள் எல்லாமே சூர்யாவுடன் நடித்ததாகத்தான் இருக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம், சூரரை போற்று படங்களிலும் நாயகிகளுக்கு சிறப்பான கேரக்டர்கள் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சூர்யா தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனமாக இருந்தாலும் தன்னுடைய படங்களில் நாயகி ரோல்களையும் சூர்யா கவனமுடன் கையாள்வதாகவும் இந்த விஷயம் தன்னை பெருமைப்பட வைப்பதாகவும் ஜோதிகா மேலும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X