சூர்யாவை விட பல கோடிக்கு சொந்தக்காரி ஜோதிகா.. மும்பையில் மட்டும் பல சொத்து!
சென்னை: நடிகர் சூர்யா இன்று தனது, பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் இவர்களுக்கு இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யாவிற்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இணையவாசிகள் சிலர் ஜோதிகாவிற்கு எவ்வளவு சொத்து என்பதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
மும்பையில் இருந்து தமிழ் துறையில் நடிகையாக அறிமுகம் ஆன ஜோதிகா, எஸ்.ஜே. சூர்யா இயக்கிய வாலி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து சூர்யாவிற்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தைத் தொடர்ந்து குஷி, முகவரி, தூள், பேரழகன், சந்திரமுகி, தென்னாலி, வேட்டையாடு விளையாடு என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.

சூர்யா, ஜோதிகா: பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோதிகா, சூர்யாவோடு இணைந்து நடித்த போதே இருவருக்கும் இடையே மனதிற்குள் காதல் பூத்துள்ளது. இதைத் தொடர்ந்து மாயாவி,பேரழகன், சில்லுனு ஒரு காதல், காக்க காக்க என பல படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். இவர்களின் காதல் கதை பத்திரிக்கையில் கிசுகிசுக்கப்பட்டதை அடுத்து, பல ஆண்டுகள் காத்திருந்து அதன் பின் தான் பெற்றோர்களது சம்மதத்தை பெற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணம்: மேலும் ஆரம்பத்தில் சூரியாவின் காதலுக்கு சூர்யாவின் தந்தை சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தனது மகளின் திருமணம் முடிந்த பிறகு தான் அதை பற்றி யோசிக்க வேண்டும் என்று சொன்னதை அடுத்து தனது சம்பாத்தியத்தில் தங்கைக்கு திருமணத்தை செய்து முடித்தார் சூர்யா. இதையடுத்து, விடாப்பிடியாக ஒன்றை காலில் நின்று ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
மீண்டும் சினிமாவில்: திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என்பதில் அதிக கட்டுப்பாடுகளை விதித்த சிவகுமாரின் பேச்சை மீறி 36 வயதினிலே படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதை அடுத்து ஒரு படத்தில் தானே என்று அனுமதி கொடுத்த சிவக்குமார். அதை தொடர்ந்து மீண்டும் நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் அடுத்தடுத்து படத்தில் நடித்து வந்த இவர், தற்போது குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகி இந்தி படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் ஜோதிகா நடித்த ஷைத்தான், ஸ்ரீகாந்த் படங்கள் பாலிவுட்டில் வசூலை அள்ளியது.
ஜோதிகாவின் சொத்து: நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான இன்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சூர்யா ஜோதிகாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி என்றும், அவரது மனைவி ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ.330 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சூர்யாவைவிட பணக்காரி ஜோதிகா தான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதில் மும்பையில் மட்டும் பல சொத்துக்களை ஜோதிகா வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ஜோதிகா தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறுப்படுகிறது. அது மட்டுமில்லாமல், சினிமா பிசினஸ் இரண்டிலும் கோலோச்சி வரும் இந்த ஜோடியின் சொத்து மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


Click it and Unblock the Notifications











