சுட்டித்தனமாக நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஜோ... பிறந்தநாள் கொண்டாட்டம்
சென்னை : நடிகை ஜோதிகா இன்றைய தினம் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு சசிக்குமாருடன் இவர் இணைந்து நடித்துள்ள உடன்பிறப்பே ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். வாலி படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவருக்கு தொடர்ந்து ஏறுமுகம்தான். தொடர்ந்து காக்க காக்க, குஷி என இவரது வெற்றிப் படங்கள் அதிகமாக இருந்தது.

சிம்ரனுடன் போட்டி
சிம்ரன் இருந்த காலகட்டத்தில் ஜோதிகாவும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த நிலையில் இருவருக்கும் இடையில் ஆரோக்கியமான போட்டி இருந்தது. அதற்கேற்ப இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் காணப்பட்டனர். அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என ஜோதிகா தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

சூர்யாவுடன் திருமணம்
இதனிடையே நடிகர் சூர்யாவை காதலித்த ஜோதிகா, கடந்த 2007ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு மீண்டும் 36 வயதினிலே என்ற படம் மூலம் இவர் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் இவருக்கு பாராட்டுக்களை கொடுத்தது.
Recommended Video

கோலிவுட்டில் ரீ என்ட்ரி
தொடர்ந்து தற்போது ராட்சசி, தம்பி, ஜாக்பாட் போன்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஜாக்பாட் படம் மீண்டும் பழைய ஜோதிகாவை நினைவுப்படுத்தியது. இதனிடையே தற்போது சசிக்குமாருடன் இணைந்து உடன்பிறப்பே என்ற படத்தில் ஜோ நடித்துள்ளார்.

உடன்பிறப்பே படம்
இந்தப் படத்தில் தன்னுடைய பக்குவமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும் இந்தப் படத்தில் அன்பான அண்ணனுக்கு தங்கையாக இவர் வெளிப்படுத்தும் பாசப்போராட்டம் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது. இதில் தேர்ந்த நடிப்பை ஜோவிடம் பார்க்க முடிகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளது. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தனது 43வது பிறந்தநாளை இன்றைய தினம் ஜோதிகா கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











