சூர்யாவை விட எனக்கு இவங்கதான் வெரி க்ளோஸ்.. ஜோதிகா கை காட்டியது யாரைத் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் க்யூட்டஸ்ட் ஜோடிகளின் வரிசையில் சூர்யா ஜோதிகா தம்பதியருக்கு என்றும் இடம் உண்டு. இருவரும் காக்க காக்க படத்திலிருந்து ஒன்றாக நடிக்க துவங்கி அதன் பின்னர் பல படங்களில் இணைந்து நடித்து அதன் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் கடந்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் தொடக்கத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது. சில மேடைகளில் சிவகுமாரின் பேச்சும் இதனை உறுதிப் படுத்தும் விதமாக இருந்தது. இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் கங்குவா படம் வெளியாகவுள்ளது. சிவகுமாரின் இளைய மகனான கார்த்தியும் தனது படங்கள் மூலம் கவனிப்பை பெற்று வருகிறார். ஒரு சினிமா குடும்பத்தில் வாக்கப்பட்டுள்ள நடிகை ஜோதிகா தனது இல்லற வாழ்க்கை குறித்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகை ஜோதிகா: ஜோதிகா மும்பையைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ் திரை உலகின் மூலம் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்தவர். தனது அசாத்திய நடிப்பால் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ஜோதிகா. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்தார். இந்த படம் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக் ஆகும்.

குடும்ப வாழ்க்கை: ஜோதிகா தனது குடும்ப வாழ்க்கை குறித்து குறிப்பிடுகையில், எனக்கு சூர்யாவை விட சூர்யாவின் குடும்பத்தினர் தான் மிகவும் நெருக்கம். நான் குழந்தை பெற்றபோது எனது அம்மாவும் சூர்யாவின் அம்மாவும் எனக்கு ஏகப்பட்ட அறிவுரைகளைச் சொன்னார்கள். எனது மாமனார் தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதிலும் பள்ளியிலிருந்து அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதையும் தனது அன்றாட கடமைகளில் ஒன்றாக கருதிச் செய்கிறார்.

எனது மகளும் மகனும் ஒரே மேடையில் அமர்ந்து சாப்பிடும் போது எனது மகளுக்கு எனது மகன் தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறான் உணவு எடுத்துக் கொடுக்கிறான் இதுபோன்ற ஆண் பெண் சமத்துவம் என்பது எங்கள் வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்பதை என் நான் கண்கூட பார்க்க முடிகிறது.

ஒத்துழைப்பு கொடுக்கும் சூர்யா: சூர்யாவும் நானும் எங்களது நாட்களை திட்டமிடுகையில் குடும்பத்திற்காக ஒதுக்கும் நாட்களில் வேறு எந்த விதமான கமிட்மெண்டுகளுக்கும் ஓகே சொல்ல மாட்டோம். அதற்கேற்றவாறு எங்களது திட்டங்களை அமைத்துக் கொள்வோம். நான் படபிடிப்பு தளத்தில் இருக்கும் போது சூர்யா வீட்டில் என்ன சமைக்க வேண்டும் குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்வார். நான் என்ன செய்தாலும் சூர்யாவும் அதில் எந்தவிதமான தடையும் விதிக்காமல் இருக்கின்றார். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள்தான் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











