சேலைக் கட்டியிருந்த போதும் துள்ளிக்குதித்து சிலம்பம் சுற்றிய நடிகை ஜோதிகா.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: விருது விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜோதிகா, அசத்தலாய் சிலம்பம் சுற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை ஜோதிகா அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, சிம்பு, மாதவன், அர்ஜுன், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

வெற்றிப்படங்கள்

வெற்றிப்படங்கள்

தமிழ் மட்டுமின்றி, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ஜோதிகா. குஷி, வேட்டையாடு விளையாடு, பூவெல்லாம் உன் வாசம், சந்திரமுகி, தூள், காக்க காக்க, மொழி உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றிப்பெற்றன.

சூர்யாவுடன்..

சூர்யாவுடன்..

1997 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஜோதிகா, கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சூர்யாவுடன் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் மற்றும் சில்லுன்னு ஒரு காதல் ஆகிய 7 படங்களில் நடித்துள்ளார் ஜோதிகா.

திருமணத்திற்கு பிறகு ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடித்துக்கொடுத்தாரே தவிர புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். இதனை தொடர்ந்து திருமண வாழ்க்கையில் பிஸியான ஜோதிகா அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். குழந்தைகள் தற்போது ஓரளவுக்கு வளர்ந்துள்ள நிலையில் நடிகை ஜோதிகா 2015ஆம் ஆண்டு முதல் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

36 வயதினிலே..

36 வயதினிலே..

திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி ஆனார். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

சிலம்பம் சுற்றிய ஜோ

சிலம்பம் சுற்றிய ஜோ

தற்போது பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா. இந்நிலையில் சென்னை ட்ரேட் சென்டரில் ஜேஎஃப்டபிள்யூ விருது விழா நடைபெற்றது. இதில் சேலையில் அசத்தலாக பங்கேற்றார் ஜோதிகா. பின்னர் சேலையிலேயே துள்ளிக் குதித்து சுற்றி சுழன்று சிலம்பம் சுற்றினார் ஜோதிகா.
ஜோதிகா சிலம்பம் சுற்றும்போதும் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோவை சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குநர் ஹாலிதா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தான் சேலை கட்டியிருப்பதை காட்டி எந்த வம்பும் செய்யாமல் சிலம்பம் ஆடியுள்ளார் என்றும் ஜோதிகாவை பாராட்டியிருக்கிறார் ஹாலிதா. ஜோதிகாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: jyothika ஜோதிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X