வேர்க்க.. வேர்க்க.. ஜோதிகாவின் வெறித்தனமான வொர்க் அவுட்.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. 2000 ஆண்டுகளில் ஒரு டாப் ஹீரோயினாக வலம் வந்த ஜோதிகா பல வெற்றிப்படங்களில் நடித்தார். சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ள ஜோதிகா, இதில் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்று கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் உருவான வாலி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகா, சூர்யாவுடன் சேர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்தார். முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து, சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

Actress Jyothika workout video trending on social media

காதல் திருமணம்: காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்துத் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தியா, தேவ் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஜோதிகா 36வயதிலே படத்தில் நடித்தார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது.

மும்பையில் செட்டில் ஆனார்: சூர்யா - ஜோதிகா இருவரும் திருமணமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகும் அன்றுபோல் இன்றும் இளமை மாறாமல் காதலுடன் மகிழ்ச்சியான கப்புள் போல இருவரும் உள்ளார். தற்போது ஜோதிகா, தமிழ் சினிமா தாண்டி, மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தன் கணவர் சூர்யாவுடன் இணைந்து படங்களைத் தயாரித்தும் வருகிறார். ஜோதிகா பிஸியாக நடித்துத் வருவதால் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

Actress Jyothika workout video trending on social media

வெறித்தனமான வொர்க் அவுட்: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகாவை மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவ்வப்போது இவர் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அந்த வீடியோவில் வெயிட்டை தூக்குவது, படிக்கட்டில் தாவி தாவி போவது, தலைகீழா தொங்குவது என வீடியோவை பார்க்கும் நமக்கே நாக்கு தள்ளிவிடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஷைத்தான்: நடிகை ஜோதிகா லீட் ரோலில் நடித்த ஷைத்தான் இந்தி திரைப்படம் மார்ச் 8ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. சூப்பர் 30, கானாபத் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கி உள்ளார். இதில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X