லாக்டவுன் காரணமாக மொட்டை அடித்துக்கொண்ட பிரபல நடிகை! கணவர் வெளியிட்ட போட்டோ.. ரசிகர்கள் வியப்பு!

By

கொச்சி: பிரபல நடிகை மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகைகள் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிசியாக இருக்கின்றனர். அதில் இல்லாத நடிகைகள் குறைவு.

தங்களது புகைப்படங்கள், கருத்துக்களை இதன் மூலம் தெரிவித்துவருகின்றனர். இதற்காக அவர்களை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நடிகை ஜோதிர்மயி

நடிகை ஜோதிர்மயி

இந்நிலையில் சமூக வலைத்தளங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார், நடிகை ஜோதிர்மயி. பிரபல மலையாள நடிகையான இவர், தமிழில், சுந்தர்.சியின் தலைநகரம், விஜயகாந்தின் சபரி, ஜீவன் நடித்த நான் அவன் இல்லை, சிம்புதேவன் இயக்கிய, அறை எண் 305-ல் கடவுள், பசுபதியின் வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

விவாகரத்து

விவாகரத்து

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நடிக்க வருவதற்கு முன்பே திருமணமானவர். தனது காதலர் நிஷாந்த் என்பவரை கடந்த 2004ல் திருமணம் செய்த இவர், 2011 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். பின்னர், மலையாள ஒளிப்பதிவாளர் அமல் நீரத் என்பவரை காதலித்தார் ஜோதிர்மயி.

மறுமணம்

மறுமணம்

சாகர் அலைஸ் ஜாக்கி என்ற மலையாளப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார் ஜோதிர்மயி. அப்போது இருக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து 2015 ஆம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டனர். இதையடுத்து சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் தனது மனைவி ஜோதிர்மயி-யின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமல் நீரத்.

சமஸ்கிருத ஸ்லோகம்

சமஸ்கிருத ஸ்லோகம்

அதில் மொட்டைத் தலையுடன் இருக்கிறார் ஜோதிர்மயி. அதற்கு கேப்ஷனாக, Tamasoma Jyothirgamaya என்று குறிப்பிட்டுள்ளார். இது சமஸ்கிருத ஸ்லோகமாம். இதற்கு, இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்லுங்குள் என்று அர்த்தம். லாக்டவுனில் ஒவ்வொருவரும் எதைஎதையோ செய்துகொண்டிருக்க, இவர் மொட்டை அடித்திருப்பது ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது. நடிகைகள் நஸ்ரியா, ரிமா கல்லிங்கல் உட்பட பல சினிமா பிரபலங்கள் இந்த போட்டோவுக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X