அப்புறம் ஏன் அப்படி நடிச்சீங்க.. டாப்ஸியை டார் டாராக கிழித்து தொங்கவிட்ட நடிகை ஜோதி பூர்வராஜ்!

ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை டாப்ஸி சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், தென்னிந்திய சினிமா குறித்தும் பாலிவுட் குறித்தும் அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், அவருக்கு டோலிவுட் நடிகை ஜோதி பூர்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் இயக்குநர்கள் அதிகளவில் க்ளியவேஜுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்றும் தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் தொப்புள் காட்சிகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என நடிகை டாப்ஸி சமீபத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Actress Jyoti Poorvaraj slams Taapsee Pannu for her recent South Indutry navel obsession criticism
Photo Credit:

சினிமாவில் அனைத்து முன்னணி நடிகைகளும் கிளாமர் காட்சிகளிலும், லிப் லாக் முத்தக் காட்சிகள் மற்றும் எல்லை மீறிய உடலுறவு காட்சிகள் வரை நடித்து வரும் நிலையில், நடிகை டாப்ஸி இப்படி பேசுவது சரி கிடையாது என்றும் இது தொழில் தர்மம் கிடையாது என்கிற விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: ஹாலிவுட்டில் நடிகைகள் முழு நிர்வாணமாக நடிப்பதற்கு முக்கிய காரணமே உலகளவில் ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகளை ஒரு வியாபார பொருளாக மாற்றி தயாரிப்பாளர்கள் சம்பாதிக்க பயன்படுத்தப்பட்ட உத்தி தான். இந்திய சினிமாவிலும் நடிகைகளை பிகினி உடைகளை காட்டுவது, லிப் லாக் காட்சிகளில் நடிக்க வைப்பது என எல்லாமே ரசிகர்களை அதிகம் கவர்ந்து பாக்ஸ் ஆபீஸை அதிகரிப்பதற்கான கமர்ஷியல் யுக்தி தான்.

நடிப்பு தொழில்: நடிகர்களும் நடிகைகளும் அதை தங்களுக்குப் பிடித்த தொழிலாக எடுத்துச் செய்கின்றனர். ஃபேஷன் துறைகளில் பணியாற்றும் நடிகைகள் ரேம்ப் வாக் செய்யும் போது வெறும் உள்ளாடைகளை அணிந்து நடந்துச் செல்கின்றனர். சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய காட்சிகளில் நடிகைகள் அதற்கு சம்மதித்தே நடிக்கின்றனர். ஒரு சில இடங்களில் நடிகைகள் மறுத்த பின்னரும் இயக்குநர்கள் வற்புறுத்துவது சர்ச்சையை கிளப்பிய சம்பவங்களும் நடந்துள்ளன. ஓகே சொல்லாத நடிகைகளை மாற்றி வேறு நடிகைகளை புக் செய்வதும் வாடிக்கை தான்.

டாப்ஸியின் ஆதங்கம்: ஆடுகளம், காஞ்சனா 2 என தமிழ் சினிமாவில் டாப்பில் இருந்த நடிகை டாப்ஸி பாலிவுட்டில் பிங்க் படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கான பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே நயன்தாரா போன்ற தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் காலடி வைத்து நடித்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் குறித்தும் தென்னிந்தியா குறித்தும் டாப்ஸி பேசியதற்கு கில்லர் பட நடிகை ஜோதி பூர்வராஜ் பதிலடி கொடுக்கும் விதமாக தனது கருத்தை பேசியுள்ளார்.

Actress Jyoti Poorvaraj slams Taapsee Pannu for her recent South Indutry navel obsession criticism
Photo Credit:

டாப்ஸிக்கு பதிலடி: சினிமாவே கிளாமர் துறை தான். யாரும் இங்கே கட்டாயப்படுத்த மாட்டார்கள். அப்படி உங்களை கட்டாயப்படுத்தி நடிக்கச் சொன்னால், நடிக்க மாட்டேன் என வேறு தொழிலை பார்த்து செல்ல வேண்டியது தானே என டாப்ஸி கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஜோதி பேசியுள்ளார். நடிகை டாப்ஸி கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளையும் சேர்த்து குறை சொல்ல ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகிறது என பாலிவுட்டிலும் அவருக்கு எதிரான எதிர்ப்பு குரல்கள் குவிந்துள்ளன. நடிகை டாப்ஸி சொல்வதிலும் உண்மை உள்ளது. பல இயக்குநர்கள் நல்ல கதைகளை விடுத்து கவர்ச்சியை மட்டுமே வைத்து வியாபாரம் செய்ய பார்க்கின்றனர் என்று அவருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X