அமைதியைத் தகர்த்தெறியுங்கள்… பெண்களுக்கு ஜோதிகா அட்வைஸ் !
சென்னை :அமைதியை தகர்த்தெறியுங்கள் என்று பெண்களுக்கு ஜோதிகா அறிவுரை கூறியுள்ளார்.
ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை பார்த்த சிறுமி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து தாயிடம் கூறியிருந்தார்.
சிறுமியின் துணிச்சலால் அந்த குற்றவாளி தற்போது சிறையில் இருந்து வருகிறார். இதுகுறித்து நடிகை ஜோதிகா அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

பொன்மகள் வந்தாள்
பல சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுவது குறித்து உருவான திரைப்படம் தான் பொன்மகள் வந்தாள், இந்த திரைப்படத்தை ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கி இருந்தார். இதில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அமேசானில் வெளியானது
இந்த படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக வாதாடி நீதியை பெற்றுத்தருவார். இத்திரைப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைவரும் பாராட்டும் திரைப்படமாக அமைந்தது.

புகார்
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ராயபுரத்தில் உள்ள 9 வயது சிறுமி, 48 வயதான கணேசன் என்ற தங்களது உறவினர் தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தாயிடம் சொல்லியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் ராயபுரத்தில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.
Recommended Video

5 ஆண்டு சிறை தண்டனை
இந்த வழக்கின் விசாரணை ஓராண்டாக சென்னை உயர்நீதிமன்ற வாளகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வந்தது. இதையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 5 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமைதியைத் தகர்த்தெறியுங்கள்
பொன்மகள் வந்தாள் திரைப்படத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு குறித்து பலரும் வெகுவாக பாராட்டி வந்தனர். இந்நிலையில் நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பெண்களுக்கு அறிவுரை கூறும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அமைதியைத் தகர்த்தெறியுங்கள்.. ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக எழுந்து நிற்கும்போது, அவள் தன்னையறியாமல் அனைத்து பெண்களுக்காகவும் நிற்கிறாள் என்று பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











