Jyotika: பிரபல பாலிவுட் நடிகையின் காலை தொட்டு கும்பிட்ட ஜோதிகா.. என்ன இப்படி இறங்கிட்டாங்க!

சென்னை: நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். கடந்த 1997ம் ஆண்டிலேயே பாலிவுட்டில் சஜா கே ரஹ்னா என்ற படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர்.

சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைகள் காரணமாக சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் வெளியே இருந்தார். 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகாவிற்கு அடுத்தடுத்த படங்கள் சிறப்பாக அமைந்து வருகின்றன. இவரது நடிப்பில் அடுத்தடுத்து ஷைத்தான், காதல் தி கோர் படங்கள் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றன.

Jyotika Dabba cartel web series Sabana asmi

நடிகை ஜோதிகா: நடிகை ஜோதிகா: நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்தவர். கடந்த 1997ம் ஆண்டில் சஜா கே ரஹ்னா என்ற இந்திப்படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தமிழிலும் முதல் படத்திலேயே அஜித்துடன் வாலி படத்தில் இணைந்து நடித்த இவர், அடுத்தடுத்து விஜய், அஜித், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து பல பட வெற்றி படங்களில் வெற்றி பட இயக்குநர்களுடன் இணைந்து நடித்துள்ள ஜோதிகா ஒரு கட்டத்தில் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஷபனா ஆஸ்மி காலில் விழுந்த ஜோதிகா: இந்நிலையில் தற்போது இந்த ஜோடி குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி உள்ளது. அங்கிருந்தபடியே தனது படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. ஜோதிகாவும் தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது Dabba cartel என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதன் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பங்கேற்றுவரும் ஜோதிகா, சமீபத்தில் மிகவும் ட்ரெண்டியான உடையில் இந்த வெப் தொடரின் பிரமோஷனில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்த சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. மூத்த நடிகை ஷபனா ஆஸ்மியை சந்தித்த ஜோதிகா அவரது காலை தொட்டு வணங்கியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Jyotika Dabba cartel web series Sabana asmi

ஜோதிகா ரீ என்ட்ரி: சினிமாவில் முன்னணி நடிகையாக இணைந்து ஏராளமான வெற்றி படங்களுக்கு சொந்தக்காரராக இருந்த ஜோதிகா சூர்யாவுடன் திருமணம், குழந்தைகள் என தன்னுடைய பிஸியான சினிமா வாழ்க்கையில் இருந்து சிறிது காலங்களில் விலகி இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் படங்களில் பிஸியாகியுள்ளார். இதனிடையே தன்னுடைய வெப் தொடரின் பிரமோஷனுக்காக பேசியுள்ள ஜோதிகா தான் குடும்பத்துடன் மும்பையில் செட்டிலானது குறித்து மீண்டும் பேசியுள்ளார். இவர் சென்னையிலிருந்து மும்பைக்கு குடும்பத்துடன் செட்டிலானது தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

மும்பையில் செட்டில்: முன்னதாக தன்னுடைய குழந்தைகளின் படிப்பிற்காக மும்பையில் செட்டிலானதாக கூறியிருந்தார் ஜோதிகா. இதையே சூர்யாவும் தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் மும்பையில் உள்ள பள்ளிகளில் அதிகமான மொழிகளை கற்கும் வசதி உள்ளதாகவும் அதனால்தான் மும்பையில் செட்டிலாகியுள்ளதாகவும் ஜோதிகா கூறியுள்ளதாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும் வயதான தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவை கவனித்துக் கொள்வதற்காகவும் அவர் மும்பையில் செட்டிலாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: jyotika ஜோதிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X