இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜோதிகா.. ஒரு மணி நேரத்தில் ஃபாலோ பண்ண 1.2 மில்லியன் ரசிகர்கள்!

சென்னை: நடிகை ஜோதிகா இதுவரை எந்தவொரு சமூக வலைதளங்களிலும் கணக்கு வைத்திராத நிலையில், முதன் முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

Recommended Video

Jothika Joins INSTA | புது Record Create செய்த Jo | Welcome Pondati ♥️

சற்றுமுன் அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் முதல் போஸ்ட் ஒன்றை இந்திய கொடியுடன் பதிவிட ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய வெறும் ஒரு மணி நேரத்தில் 12 லட்சம் பேர் அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

சோஷியல் மீடியாவில் ஜோ

சோஷியல் மீடியாவில் ஜோ

நடிகர் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா முதன்முறையாக சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார். இதுவரை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எந்தவொரு சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இல்லாத ஜோதிகா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஐடியை அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஃபேக் ஐடிக்கள்

ஃபேக் ஐடிக்கள்

நடிகை ஜோதிகா பெயரில் ஏற்கனவே ஏகப்பட்ட போலியான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் ஐடிக்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில், போலிகளை களையும் முயற்சி மற்றும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவும் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கி இருக்கிறார் நடிகை ஜோதிகா.

தேசியக் கொடியுடன்

தேசியக் கொடியுடன்

இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை ஜோதிகா முதல் போஸ்ட்டாக கணவர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்வார் என பார்த்தால், தேசியக் கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இமய மலையில்

இமய மலையில்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 70 கி.மீ., இமய மலையில் நண்பர்களுடன் டிரெக்கிங் செய்த அனுபவத்தையும் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஷேர் செய்து தனது முதல் போஸ்ட்டை நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார். பல பிரபலங்கள் ஜோதிகாவின் போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

மை பொண்டாட்டி

மை பொண்டாட்டி

நடிகர் சூர்யா கடந்த ஆண்டு தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அவருக்கு இதுவரை 3.2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது இன்ஸ்டா ஸ்டோரீஸில் "My Pondatti Strongest! Thrilled to see you on insta" என ஜோதிகாவை இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரவேற்றுள்ளார்.

டிரெண்டிங்கில் ஜோ

டிரெண்டிங்கில் ஜோ

நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜோதிகாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை அறிமுகப்படுத்திய நிலையில், ஏகப்பட்ட சூர்யா மற்றும் ஜோதிகா ரசிகர்கள் ஜோதிகாவை வரவேற்று #Jyotika என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

உடன்பிறப்பே

உடன்பிறப்பே

சூர்யா தயாரிப்பில் வரிசையாக 4 படங்கள் 4 மாதங்களுக்கு என 2டி நிறுவனம் சார்பில் அமேசான் பிரைமில் வெளியாக காத்திருக்கின்றன. நடிகர் சசிகுமார் உடன் இணைந்து ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் அடுத்த அக்டோபர் மாதம் ஒடிடியில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X