Jyotika: மும்பைக்கு போனதும் கியரை மாற்றிய ஜோதிகா.. இப்போ CEO.. செம அட்வைஸ் சொல்றாங்களே!

மும்பை: நடிகை ஜோதிகா மும்பைக்கு மொத்தமாக தனது குடும்பத்தோடு செட்டில் ஆன பின்னர் அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் பலரது கவனத்தை ஈர்க்கிறது. இது மட்டும் இல்லாமல், இவரது நடவடிக்கைகளில் இணையவாசிகள் பலர், ஜோதிகாவின் மாமனாரான, நடிகர் சிவக்குமாரை இழுத்து விட்டுவிடுகிறார்கள். அப்படித்தான் ஜோதிகாவின் தற்போதைய இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு சிவக்குமாரை இழுத்து விட்டுள்ளார்கள். அது குறித்து பார்க்கலாம்.

ஜோதிகா கடந்த சில ஆண்டுகளாகவே குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா என இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார். மேலும் இவர் நடிக்கும் படங்கள், வெப் சீரிஸ்கள் எல்லாம் ஹிட் அடித்து வருகிறது. அதற்கு காரணம் ஜோதிகாவின் நடிப்பும், கதாபாத்திரத் தேர்வும் முக்கிய காரணமாக இருந்தால், கதைத்தேர்வு எக்ஸலண்ட்டாக இருந்து வருகிறது. ஜோதிகா நடிக்கிறார் என்றால், அந்த படத்தை கட்டாயம் பார்க்கலாம், ரிப்பீட் வொர்த்தியாக இருக்கும் என ரசிகர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டு உள்ளார்.

இது ஒரு புறம் இருக்க, ஜோதிகா இப்போது திடீரென சினிமாவில் செம ஆக்டிவாக இருக்க காரணம் அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை என்ற பேச்சு, இப்போதும் திரைத்துறை வட்டாரத்தில் உலா வருகிறது. ஆனால், ஜோதிகா எப்போது மீண்டும் நடிக்க வருவார் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்ததால், ஜோதிகா மீண்டும் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது. 36 வயதினிலே படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை ஜோதிகா தொடங்கியிருந்தாலும், இப்போது மும்பைக்கு ஷிஃப்ட் ஆன பின்னர் அவர் செய்யும் படங்கள் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தருகிறது.

Actress Jyotika Says Be the CEO of your own life on Hes Instagram Post

ஜோதிகா: மும்பைக்கு ஜோதிகா ஷிஃப்ட் ஆனதற்கு காரணம், குடும்பத் தகராறில் சிவக்குமார் உடன் ஏற்பட்ட பிரச்னை என கூறப்படுகிறது. அதனால்தான், அவர் மும்பைக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதற்கு தரமான கேப்ஷன்களும் இட்டு வருகிறார்.

சிவக்குமார்: அந்த வகையில், ஜோதிகா கடைசியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், கோட் சூட் அணிந்து கொண்டு, டை கட்டிக் கொண்டு செம ஸ்டைலிஷான கெட்டப்பில் இருக்கிறார். இந்த புகைப்படங்களை ஜோதிகா பகிர்ந்தது மட்டும் இல்லாமல், அதற்கு " உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் CEO-ஆக இருங்கள்" என பதிவிட்டுள்ளார். ஜோதிகாவின் இந்த பதிவைப் பார்த்த இணையவாசிகள், உங்கள் வாழ்க்கைக்கு எப்போதும் நீங்கள்தான் CEO எனவும், சிவக்குமாரை மறைமுகமாக சாடித்தான் இவ்வாறாக பதிவிட்டுள்ளார் எனவும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Actress Jyotika Says Be the CEO of your own life on Hes Instagram Post

சர்ச்சை: ஜோதிகா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் திரையுலகம் குறித்தும் தென்னிந்திய சினிமா குறித்தும் காட்டமான விமர்சனத்தை மிகவும் நேர்மையாக எடுத்து வைத்திருந்தார். அதாவது, தென்னிந்திய சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அவர்களின் கதாபாத்திரம் பெரும்பாலும், கதாநாயகர்களுடன் காதல், ரொமன்ஸுக்கு மட்டுமே கட்டமைக்கப்படுகிறது என விமர்சித்தார். இவரது விமர்சனத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Take a Poll

More from Filmibeat

Read more about: jyotika jyotika suriya sivakumar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X