நான் அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்ய மாட்டேன், குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்: கங்கனா

அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்ய மாட்டேன் என கங்கனா கூறியுள்ளார்

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம்ரவியுடன் தாம் தூம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தியில் இப்போது வரலாற்று படமான மணிகர்னிகாவில் நடித்து வருகிறார்.

Actress Kagana Ranaut political statement!

இந்திய ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் என பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து வரும் அவர், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கங்கனா, நான் இப்போது மணிகர்னிகா படத்தில் நடித்து வருகிறேன். இப்போது தான் பங்கா திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. நான் எப்போதும் ஒரு வேலையை செய்தால் அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு செய்வேன்.

அதனால் நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று நினைத்தால், திருமணம் செய்துகொள்ள மாட்டேன், குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன். வேறு எந்த வேலையிலும் ஈடுபட மாட்டேன். மக்களுக்கு சேவையாற்றும் ஊழியராக இருப்பவர் தான் அரசியல்வாதி என்றார்.

பிரதமர் மோடியின் பால்ய வயது வாழ்க்கையை சித்தரிக்கும் ச்சலோ ஜீத்தே ஹெய்ன் என்ற குறும்படத்தை பார்த்த பிறகு, ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் என பிரதமர் மோடியை புகழ்ந்தார் கங்கனா. அதனால் அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதாக பலரும் கருதுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X