இந்தியன் 2.. அப்போ நாங்க கேள்விப்பட்டதெல்லாம் பொய்யா காஜல்.. இப்டி ஒரு குண்டை தூக்கி போட்டுட்டீங்களே

இந்தியன் 2 படத்தில் 85 வயது மூதாட்டியாக தான் நடிக்கவில்லை என நடிகை காஜல் அகர்வால் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

Indian 2 Shooting Spot:நடிகை காஜல் அகர்வால் 85 வயது மூதாட்டியாக நடிக்கிறார்

சென்னை: இந்தியன் 2 படத்தில் 85 வயது மூதாட்டியாக நடிப்பது குறித்து நடிகை காஜல் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் கமலின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படம் இந்தியன். 23 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றனர் கமலும், ஷங்கரும். சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு சிக்கல்களை தாண்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

போபாலில் படப்பிடிப்பு

போபாலில் படப்பிடிப்பு

இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடந்தது. தற்போது குவாலியரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்ததாக தைவான் மற்றும் ஐரோப்பில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

85 வயது பாட்டி

85 வயது பாட்டி

இந்தியன் படத்தில் சுகன்யா நடித்த பாட்டி கெட்டப்பில் தான் இதில் காஜல் நடிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதன்படி கமல் கதாபாத்திரத்திற்கு 90 வயது என்றால், காஜல் கதாபாத்திரத்திற்கு 85 வயது என கூறப்பட்டது. இதனால் காஜல் வயதான தோற்றத்தில் தான் நடிக்கிறார் என ரசிகர்கள் நம்பினர்.

மறைமுக விளக்கம்

மறைமுக விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து காஜல் விளக்கம் அளித்துள்ளார். அதில் இந்தியன் 2 படத்தில் தான் 85 வயது பாட்டியாக நடிக்கவில்லை என அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

தற்காப்பு கலை வல்லுனர்

தற்காப்பு கலை வல்லுனர்

இதுகுறித்து மேலும் அவர், "இந்தியன் 2 படத்தில் நான் தற்காப்பு கலைகள் தெரிந்த ஒரு பெண்ணாக நடிக்கிறேன். எனவே தற்காப்பு கலைகள் பயின்று வருகிறேன். இந்தியன் 2 படத்தில் நான் 85 வயது பாட்டியாக நடிக்கிறேன் என சொல்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது. தைவானில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் நான் கலந்துகொள்ளவுள்ளேன்'' எனக் கூறினார்.

இந்தியன் சுகன்யா

இந்தியன் சுகன்யா

காஜலின் இந்த பேட்டி பல்வேறு விஷயங்களை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்தியன் படத்தில் சுகன்யாவின் கதாபாத்திரம் அஹிம்சை வழியில் போராடும் ஒரு சுதந்திர போராட்ட வீராங்கனை. அந்த படத்தில் கமல் தான் வர்மக்கலை வித்தகராக இருப்பாரே தவிர, சுகன்யாவுக்கு எந்த தற்காப்பு கலையும் தெரியாது.

பாட்டியாக நடிக்கவில்லை

பாட்டியாக நடிக்கவில்லை

எனவே காஜல் இதில் வயதான பாட்டியாக நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. கமலுக்கு உதவி செய்யும், அல்லது கமலிடன் தற்காப்பு கலை பயிலும் பெண்ணாக காஜலின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது.

கமலுக்கு ஜோடி?

கமலுக்கு ஜோடி?

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது, கமலுக்கு காஜல் ஜோடியாக நடிக்கிறாரா இல்லையா என்ற பெரிய குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தில் கமலுடன் பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். அதுபோல் காஜலின் கதாபாத்திரமும் அமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X