காதலராய் இருந்தபோது தனது மெழுகு சிலையை பார்த்து பிரமித்த கவுதம் கிட்ச்லு.. உண்மையை உடைத்த காஜல்!

சென்னை: நடிகை காஜல் அகர்வால் தனது மெழுகு சிலையுடன் தனது கணவர் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு ஒரு உண்மையை போட்டுடைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் கடந்த அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது.

மாலத்தீவில் ஹனிமூன்

மாலத்தீவில் ஹனிமூன்

தனது நீண்டநாள் காதலரான தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவை கரம் பிடித்த காஜல், மாலத்தீவில் தனது ஹனிமூனை கொண்டாடினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

திருமணத்திற்கு பிறகு..

திருமணத்திற்கு பிறகு..

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் அகர்வால் தொடர்ந்து தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு ஹாட்னஸ் கூடி விட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உண்மையை கூறிய காஜல்

உண்மையை கூறிய காஜல்

இந்நிலையில் இன்று ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள காஜல், ஒரு உண்மையையும் கூறியுள்ளார். அதாவது, சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கடந்த ஆண்டு காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது.

முதல் தென்னிந்திய நடிகை

முதல் தென்னிந்திய நடிகை

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் முதல் முதலில் மெழுகு சிலை வைக்கப்பட்ட தென்னிந்திய நடிகை என்ற சிறப்பையும் பெற்றார் காஜல். மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு ஆகியுள்ளது.

சிலை திறப்புக்கு முன்பே..

இதனை முன்னிட்டு மெழுகு சிலையுடன் தானும் கவுதம் கிட்ச்லுவும் சிலையுடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் மெழுகு சிலை திறப்புக்கு முன்பே, கவுதம் கிட்சுலு தனது காதலராய் இருந்த போது தனது சிலையை பார்த்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X