ப்பா.. கண்ணே பட்டுடும் போல.. மாலையும் கழுத்துமாய் இன்றே மணப்பெண் கோலத்தில் காஜல்.. வைரல் போட்டோஸ்!

சென்னை: நடிகை காஜல் அகர்வாலுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோக்கள் தீயாய் பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நாளை திருமணம்

நாளை திருமணம்

மூன்று வாரங்களுக்கு முன்பு அக்டோபர் 30-ம் தேதி திருமணம் என தனது திருமண தேதியை அறிவித்திருந்தார் காஜல். இந்நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதியான நாளை மும்பையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

காஜல் இன்ஸ்டா

காஜல் இன்ஸ்டா

இதனைது முன்னிட்டு திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியான மெகந்தி செர்மனி நடைபெற்றது. அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் காஜல் அகர்வால்.

முந்தைய சடங்குகள்

முந்தைய சடங்குகள்

அதனை பார்த்த பலரும் நடிகை காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் வீட்டில் திருமணத்திற்கு முந்தைய சில சடங்குகள் நடைபெற்றுள்ளது.

கழுத்தில் மாலையுடன்

கழுத்தில் மாலையுடன்

இதில் லெமன் யெல்லோ நிற ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்துள்ள காஜல், கழுத்தில் மாலை, நெத்திச்சுட்டி என செம க்யூட்டாக உள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஹேஷ்டேக் ட்ரெண்ட்

ஹேஷ்டேக் ட்ரெண்ட்

அந்த போட்டோக்களை பார்த்த பலரும், வாவ்.. செம் க்யூட் என தெரிவித்து வருகின்றனர். இதனிடையே #KajalGautamWeddingOnOct30 என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X