Kajal Agarwal :வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் இந்தியன் 2 நடிகை.. அழகு ரகசியம்!
சென்னை : நடிகை காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன காஜல் அகர்வாலுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இந்தியன் 2 படத்தில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இதன் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
காஜல் அகர்வாலின் வொர்க் அவுட் வீடியோ : நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தமிழிலும் நடிகர்கள் விஜய், சூர்யா, அஜித், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், பாலிவுட்டிலும் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன காஜல் அகர்வாலுக்கு நீல் கிச்சுலு என்ற ஆண் குழந்தையும் உள்ளது. ஆனாலும் தன்னுடைய உடலை சிறப்பாக பராமரித்து வருகிறார்.
தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் காஜலுக்கு முக்கியமான ரோல் என்று கூறப்பட்டுள்ளது. சூட்டிங்கின்போது குதிரையேற்றத்தில் இவர் ஈடுபட்ட புகைப்படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு மற்றும் இந்தியிலும் சில படங்களில் காஜல் அகர்வால் கமிட்டாகியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சினிமாவில் நிலைத்திருக்கிறார். பாலிவுட்டில் அறிமுகமான இவர், தமிழில் பொம்மலாட்டம் என்ற படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். தற்போது சொந்தமாக பிசினசையும் துவங்கியுள்ளார். Kajal by Kajal என்ற பெயரில் அழகு சாதனப் பொருட்களை இவர் விற்கத் துவங்கியுள்ளார்.
இந்நிலையில் குழந்தை பிறப்பிற்கு பிறகு சற்றே குண்டாகியிருந்த காஜல் அகர்வால், தொடர்ந்து வொர்க் அவுட் மற்றும் யோகா உள்ளிட்டவற்றால் தன்னை ஸ்லிம்மாக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் காஜல் அகர்வால் அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

பாலிவுட்டில் அறிமுகமானாலும் தென்னிந்திய மொழிப் படங்களே காஜல் அகர்வாலுக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், அஜித்துடன் விஸ்வாசம், சூர்யாவுடன் மாற்றான், ஜெயம் ரவியுடன் கோமாளி போன்ற படங்களில் நடித்துள்ள காஜல் இந்தியை தொடங்கி தெலுங்கில் தான் நடித்தார். இதையடுத்து இவருக்கு தமிழில் நடிக்கும் வாய்ப்புகள கிடைத்தன. இந்நிலையில் திருமணம் முடிந்து, குழந்தையும் பிறந்த நிலையில் தொடர்ந்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











