டெலிவரிக்கு பிறகு மீண்டும் ஆட்டத்தை துவங்கிய காஜல் அகர்வால்... முதல் புகைப்படம் வெளியீடு!
ஐதராபாத் : நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் சிறப்பான படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டில் இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அதை தொடர்ந்து கர்ப்பமாக இருந்த காஜலுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் சிறப்பான நடிகையாக தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் இருந்தவர். தமிழில் விஜய், சூர்யா, அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் தென்னிந்திய மொழிகளில் காணப்படுகின்றனர்.

அடுத்தடுத்து ஹிட் படங்கள்
பேரரசு இயக்கத்தில் பழனி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் காஜல் அகர்வால். தொடர்ந்து விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான் மற்றும் கார்த்தியுடன் நான் மகான் அல்ல, அழகுராஜா ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

கௌதம் கிட்சுலுவுடன் திருமணம்
தனுஷுடன் இவர் நடித்த மாரி படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இதேபோல தமிழில் இவர் இறுதியாக நடித்த கோமாளி படம் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இதையடுத்து தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்
தொடர்ந்து கர்ப்பமான இவர் அடுத்தடுத்து தனது வளைகாப்பு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய கர்ப்பமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான லைக்ஸ்களை பெற்றன.

ஆண் குழந்தை பிறந்தது
இந்நிலையில் கடந்த 19ம் தேதி இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு நெய்ல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்கள் எந்தவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிராமல் இருந்த காஜல் அகர்வால் தற்போது டெலிவரிக்கு பின்பு தன்னுடைய முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தங்கையுடன் புகைப்படம் பகிர்வு
இந்தப் புகைப்படத்தில் அவரது குழந்தை அல்லது கணவர் இருப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது தவறு. மாறாக தன்னுடைய தங்கை நிஷா அகர்வாலுடன் இந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். நிஷா அகர்வாலும் இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











