ஆழ்கடலில் கணவருடன் ஜாலியா ஆட்டம் போடும் காஜல் அகர்வால்..வைரலாகும் புகைப்படம்!
மும்பை : தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் ஹிந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமாக உள்ளார்.
விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் சமீபத்தில் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் மிகக் கோலாகலமாக நடத்தப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து ஹனிமூனுக்கு மாலத்தீவு உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் இப்பொழுது பிகினி உடையில் ஆழ்கடலில் அசராமல் நீந்திக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.

க்யூட்டான நடிப்பு
முட்டக் கண்ணுமுழி, க்யூட்டான நடிப்பு, பார்க்கப் பார்க்க திகட்டாத நடனம் என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெற்றியுடன் வலம் வந்த காஜல் அகர்வால் தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

தமிழில் பாரிஸ் பாரிஸ்
இந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான குயின் திரைப்படம் தென் இந்தியாவில் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் உருவாகி வருகிறது அதில் காஜல் அகர்வால் கங்கனா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திருமணம் செய்து
பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, ஆச்சார்யா, ஹேய் சனாமிகா போன்ற பல திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டதோடு திரையுலகமே ஒன்று கூடி இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.

க்யூட்டான புகைப்படங்களை
வெகு விமர்சையாக நடைபெற்ற இவர்களது திருமணத்தைத் தொடர்ந்து இப்பொழுது மாலத்தீவு உள்ளிட்ட பல இடங்களுக்கு ஹனிமூன் சென்ற இந்த ஜோடிப் புறாக்கள் அதில் ஜோடியாக எடுத்துக் கொண்ட செம க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து அவை வைரலானது.

கணவருடன் ஜாலியாக
இந்நிலையில் இப்பொழுது காஜல் அகர்வால் பிகினி உடையில் கடல் கன்னியைப் போன்று ஆழ்கடலில் அசராமல் தனது கணவருடன் ஜாலியாக நீந்தி குளித்துக்கொண்டு வெளியிட்டுள்ள இந்த பிகினி புகைப்படங்கள் ரசிகர்களை வாய் பிளக்க வைத்ததோடு தொடர்ந்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











