பிறந்த நாள் கொண்டாடும் கண்டாங்கி அழகி காஜல் அகர்வால்.. சம்பளமும் சொத்து மதிப்பும் இதுதான்!

சென்னை: தென்னிந்திய சினிமா உலகத்தில் தான் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்றைக்கு வரை தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும், ஹிட் ஆகும் படங்களிலும் நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவரது சினிமா வாழ்க்கை கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான கியூன் ஹோ கயா நா என்ற இந்திப் படத்தில் தொடங்கியது. பழனி, பொம்மலாட்டம் தமிழ் மக்கள் மத்தியில் கவனமீர்த்த படங்களாக இருந்தது.

ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மாவீரன் படம் காஜல் அகர்வாலை தமிழ் மக்கள் மத்தியில் நன்கு கொண்டு சேர்த்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துவரும் காஜல் அகர்வாலுக்கு இன்று 39வது பிறந்த நாள். இவர் 1985ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

Kajal Aggarwal

பொதுவாக 30 வயதைக் கடந்து விட்டாலே ஒரு நடிகையை தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் கதாநாயகி கதாபாத்திரங்கள் கொடுக்காமல் ஓரம் கட்டப்படுவார்கள். ஒருசிலர் மட்டும்தான் தனது மார்க்கெட்டினை சரியாமல் பார்த்துக் கொள்வார்கள். அப்படியான நடிகைகள் பட்டியலில் காஜல் அகர்வால் பெயர் இன்றும் இருக்கின்றது. கதாநாயகர்களுடன் இணைந்து படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், கதாநாயகியை மையப்படுத்திய கதைகளிலும் நடித்து வருகின்றார். அண்மையில் தெலுங்கில் வெளியான சத்யபாமா படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

முன்னணி கதாநாயகி: 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தமிழில் துப்பாக்கி, மெர்சல், நான் மகான் அல்ல, மாரி, பாயும் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள மிகப்பெரிய படமாக இந்தியன் 2 உள்ளது. இந்தப் படம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியிடப்படவுள்ளது.

Kajal Aggarwal

குழந்தைக்குப் பின்னரும் சினிமா: கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கீட்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு நீல் கீச்சுலு என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணம், அதன் பின்னர் குழந்தை பிறந்த பின்னரும் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் காஜல் நடித்து வருகின்றார். இவர் அதிகப்படியான பணக்காரர்கள் வசிக்கக்கூடிய மும்பையின் தெற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றார். இவரிடம் ஆடி, மெர்சிடஸ் மற்றும் மினி கூப்பர் போன்ற விலை உயர்ந்த கார்கள் உள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 85 கோடி ஆகும். இவர் ஒருபடத்தில் நடிக்க ரூபாய் 4 கோடி சம்பளம் வாங்குகின்றார்.

மக்களுடனான தொடர்பு: சினிமா வாய்ப்புகள் கொஞ்சம் டல் அடிக்கும்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக களமிறங்கி மக்கள் மத்தியில் தன்னை தொடர்ந்து வெளிக்காட்டி வருகின்றார். விளம்பரங்களில் நடிக்க காஜல் அகர்வால் ரூபாய் ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை சம்பளம் வாங்குகின்றார். தற்போது மான்யவர் மற்றும் டைட்டன் வாட்ச் ஆகியவற்றுடன் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் சமூகத் தொண்டு விஷயங்களிலும் காஜல் அகர்வால் நேரடியாகவே ஈடுபட்டு வருகின்றார்.

Kajal Aggarwal

சினிமா, சின்னத்திரை, விளம்பரங்கள் மற்றும் சமூகத் தொண்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மூலம் மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் காஜல் அகர்வால் எதிர்வரும் காலங்களில் மிகப்பெரிய வெற்றிகளைக் குவிக்கும் படங்கள் கொடுத்து மக்களை தொடர்ந்து மகிழ்விக்க ஃபிலிமி பீட் சார்பாக வாழ்த்துகள்.

More from Filmibeat

Read more about: kajal aggarwal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X