காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது… வாழ்த்தும் ரசிகர்கள் !
சென்னை : நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துள்ளது. காஜல் அகர்வால் , கவுதம் கிச்சிலு தம்பதிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
Recommended Video
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கடந்த 2008 -ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்ததுடன் வசூலில் சாதனை படைத்தது.

முன்னணி நடிகை
தமிழில் விஜயின் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்த காஜல் அகர்வால் முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். அஜித், சூர்யா, தனுஷ் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

திருமணம்
படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது ரொமாண்டிக் புகைப்படங்கள் அவ்வப்போவது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தது.

கர்ப்பமான காஜல்
ஆனால் காஜல் அகர்வால் இடை இடையே பதிவிட்டு வந்த புகைப்படங்கள் இணையவாசிகளுக்கு அவர் கர்ப்பமாக இருப்பதை தெரியப்படுத்தியது. அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படத்துடன் கூடிய பதிவை காஜல் அகர்வாலின் கணவர் வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வந்தனர்.

குவியும் வாழ்த்துக்கள்
அதற்கு பிறகு தனது கர்ப்பகாலத்தில் எடுத்த போட்டோ ஷூட்களை சமூக வலைதளத்தில் அவ்வப்போது காஜல் பதிவிட்டுவந்தார். இந்நிலையில் காஜல் அகர்வால் கிச்லு தம்பதிக்கு இறைவனின் ஆசிர்வாதத்துடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











