இந்து - முஸ்லீம் தாக்குதலா?.. ஆண்ட்ரியாவை போல காஜலும்.. தவறான வழியில் போகாதீங்க
சென்னை: ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்ஹாம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாத கும்பல் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் உலக தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், விளையாட்டு பிரபலங்கள், நடிகர் நடிகைகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே நடிகை ஒருவர் கூறி இருக்கும் கருத்திற்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. அங்கு சுற்றுலாப் பயணிகள் இந்தக் குதிரை சவாரிப் பயணத்தை மேற்கொள்வது நாள்தோறும் இயல்பான ஒன்று. ஆனால், கடந்த 22ஆம் தேதி பைசரன் மலை உச்சியில் அமைந்துள்ள ரிசார்ட் அருகே திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 12 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

வெறுப்பை விதைக்காதீர்கள்: நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, "பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்து - முஸ்லீம்களுக்கு இடையேயான பிரச்னை கிடையாது. இதனை வேறுவிதமாக வெறுப்பாளர்கள் திசை திருப்புகின்றனர். அதைத்தான் அவர்களும் விரும்புகின்றனர். அங்கு பயங்கரவாதத்துக்கும் மனிதநேயத்துக்குமான மோதல் நடந்திருக்கிறது. ஆனால், ஒரு பெயரை வைத்து கொண்டு யாரையும் பிரிக்க வேண்டாம். ஒரு பெயரை வைத்து பிரிக்க நினைப்பதால் பிரிவினையும் பயங்கவாரதமும் மட்டுமே அதிகரிக்கும். இந்த நேரத்தில் நாம் எப்போதும் இல்லாத அளவிற்கு அனைவரும் ஒன்று பட வேண்டும். ஒரே இனம் என்ற உணர்வை பகிர்வோம் என தெரிவித்துள்ளார். மேலும் மதத்தின் பெயரால் சமூகவலைதளங்களில் தவறான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. இதனை குறிப்பிட்டுத்தான் காஜல் அகர்வால் கருத்து தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இஸ்லாமியர்கள் மீது வெறுப்பா?: பஹல்காம் தாக்குதல் இந்திய நாட்டையே உலுக்கியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு பிறகு முஸ்லீம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்திருப்பதாகவும் அதுதொடர்பான வீடியோக்களும் அதிகம் பகிரப்படுகிறது. இதனால், மக்களின் மனநிலையும் மாற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இதற்கு பல்வேறு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. தற்போது காஜல் அகர்வால் தெரிவித்திருக்கும் கருத்து வெறுப்பை திணிக்க வேண்டாம் என்பதையே வலியுறுத்துகிறார். இந்தியர்களாக ஒன்றுபட வேண்டும் என்றே தெரிவித்துள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், காஜல் அகர்வாலின் கருத்தும் சரியானது தான் என்கின்றனர்.

ஆண்ட்ரியா கருத்து: பஹல்காம் தாக்குதலுக்கு அண்மையில் நடிகை ஆண்ட்ரியாவும் இதேபான்ற கருத்தைத்தான் பதிவு செய்திருந்தார். தற்போது அதைத்தான் காஜல் அகர்வாலும் கூறியிருப்பதாக தமிழ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் கூறியதாவது, "தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது.நமது நாடு (மதரீதியாக) அதிகம் பிரித்து அணி திரட்டப்படும் ஒரு சூழலில், ஒரு குறிப்பிட்ட மதம்/சமூகத்திற்கு எதிரான வெறுப்பாக திசை திருப்பப்படாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை என தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











