சினிமாவுக்கு முழுக்கு போடும் காஜல் அகர்வால்… அப்போ இந்தியன் 2 என்னவாகும்?
சென்னை : நடிகை காஜல் அகர்வால் சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கடந்த 2008 -ம் ஆண்டு பரத் நடித்த 'பழனி' படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். ஆனால், அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை
இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல் அகர்வால், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்து வசூலில் சாதனை படைத்தது.

காஜல் அகர்வால்
மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

திருமணம் செய்து கொண்டார்
படங்களில் பிஸியாக நடித்துகொண்டு இருக்கும் போதே, 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது ஹனிமூன் புகைப்படங்களும், ரொமாண்டிக் புகைப்படங்களும் அவ்வப்போவது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தின.

ஆண் குழந்தை பிறந்தது
காஜல் அகர்வால் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் காஜல் அகர்வால் கிச்லு தம்பதிக்கு இறைவனின் ஆசிர்வாதத்துடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்திருந்தனர். தனது குழந்தையின் புகைப்படத்தை அன்னையர் தினத்தன்று வெளியிட்டு, அன்னையாக இருப்பதில் பெருமை அடைவதாக கூறியிருந்தார்.

சினிமாவுக்கு முழுக்கு
இந்நிலையில், காஜல் அகர்வால், திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், குழந்தையை கவனிக்க நேரம் தேவைப்படுவதாகவும், குழந்தை என் அரவணைப்பில் வளர்க்கவே விரும்புவதாகவும் இதனால், ஓராண்டு கழித்து நடிப்பது குறித்து யோசிப்பதாக கால்ஷீட் கேட்டு வருபவர்களுடம் காஜல் அகர்வால் கூறி வருவதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2
நடிகை காஜல் அகர்வால் எடுத்துள்ள முடிவால், கமலின் ரசிகர்கள் அப்போ இந்தியன் 2 என்னவாகும் என கேட்டு வருகின்றனர். ஏற்கனவே படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கொரோனா, இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு போன நிலையில், காஜல் அகர்வால் எடுத்துள்ள முடிவால் மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு
'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். எனவே காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் மீண்டும் படமாக்கப்பட உள்ளது. இயக்குநர் ஷங்கர், ராம்சரணை வைத்து RC15 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இந்தியன் 2 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











