குடும்பத்துடன் கோவாவில் காஜல் அகர்வால் குதூகலம்.. மகனின் முதல் விடுமுறை கொண்டாட்டம் என சிலிர்ப்பு!

கோவா : நடிகை காஜல் அகர்வால் விஜய், அஜித் உள்ளிட்டவர்களுடன் இணைந்து சிறப்பான பல படங்களை தந்தவர்.

தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

நடிப்புடன் கவர்ச்சியையும் கலந்துக் கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டவர் காஜல் அகர்வால்.

நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால்


நடிகை காஜல் அகர்வால் அறிமுகமானது என்னவோ இந்தியில்தான். கடந்த 2004ல் ஹோ கயா நா என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் 2007ல் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே தமிழிலும் பரத்துடன் இணைந்து பழனி என்ற படத்தில் நடித்தார்.

சிறப்பான மகதீரா படம்

சிறப்பான மகதீரா படம்

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என தன்னை பிசியாக்கிக் கொண்ட காஜல் அகர்வாலுக்கு ராம்சரணுடன் நடித்த மகதீரா சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து அவருக்கு ஏறுமுகம்தான். தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் காஜல் அகர்வால்.

விஜய்யுடன் அடுத்தடுத்த படங்கள்

விஜய்யுடன் அடுத்தடுத்த படங்கள்

விஜய்க்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடித்தார். ஜில்லா, துப்பாக்கி, மெர்சல் என விஜய்யுடன் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட். குறிப்பாக கண்டாங்கி பாடலில் மிகவும் கலக்கலாக நடித்திருப்பார். விஜய்யின் சிறப்பான ஜோடிகளில் இவரும் ஒருவர் என்ற பெயர் ரசிகர்களிடையே இவருக்கு கிடைத்தது.

திருமணம் செய்துக்கொண்ட காஜல்

திருமணம் செய்துக்கொண்ட காஜல்

தொடர்ந்து பிசியாக நடித்துவந்த காஜல் அகர்வால், இறுதியாக ஜெயம் ரவியுடன் கோமாளி படத்தில் நடித்தார். இதையடுத்து கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீல் என்ற ஆண்குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையின் முதல் விடுமுறை கொண்டாட்டம்

குழந்தையின் முதல் விடுமுறை கொண்டாட்டம்

தொடர்ந்து தன்னுடைய ஹனிமூன், கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திவந்த காஜல் அகர்வால் தற்போது தன்னுடைய குழந்தையின் முதல் விடுமுறை கொண்டாட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது கோவாவில் குடும்பத்தினருடன் விடுமுறையில் உள்ளார் காஜல் அகர்வால்.

வீடியோ பகிர்ந்த காஜல்

வீடியோ பகிர்ந்த காஜல்

இதன் வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார். இதில் காஜலின் கணவர், குழந்தை மற்றும் உறவினர்கள் ஆகியோர் காணப்படுகின்றனர். தேநீரை கலக்குவதில் துவங்குகிறது கலக்கலான இந்த வீடியோ. தொடர்ந்து அழகான மழையை தேநீரை சுவைத்தபடி என்ஜாய் செய்கிறார் காஜல்.

கிச்சுலுவிற்கு முத்தமழை

தொடர்ந்து தன்னுடைய கணவர் கிச்சுலுவிற்கு முத்தமழை பொழிகிறார் காஜல் அகர்வால். பீச்சில் தனியாக இருவரும் நடைபயணம் செய்கிறார்கள். தன்னுடைய குழந்தையை கடலலையில் நனைக்கிறார். இவ்வாறு செல்கிறது அந்த வீடியோ. தன்னுடைய விடுமுறையை சிறப்பாக கொண்டாடி வருகிறார். மேலும் கோவா எப்போதும் தனது இதயத்திற்கு நெருக்கமானது என்றும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X