'அதைத்தாம்பா சட்டையா தச்சி போட்டிருக்காங்க...' காஜல் அகர்வாலை கவலையின்றி கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள போட்டோவை ரசிகர்கள், கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.

தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஹே சினாமிகா

ஹே சினாமிகா

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் அவர் நடித்து வருகிறார். நடிக்கிறார். இந்தியில் மும்பை சாகா என்ற படத்திலும் நடித்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா படத்திலும் நடித்து வருகிறார். இதில் துல்கர் சல்மான் ஹீரோ. இன்னொரு ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார்.

இந்தியன் 2

இந்தியன் 2

இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகியதை அடுத்து, அந்த படத்திலும் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில், விபத்து நடந்தபோது, மயிரிழையில் உயிர் தப்பியவர்களில் இவரும் ஒருவர். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

சட்டை மட்டும்

இதற்கிடையே அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 'மகிழ்ச்சியாக இருங்கள், மகிழ்ச்சியாக சிந்தியுங்கள், இந்த நேரத்தில் வாழ்வதற்கு ஒரு பெரிய குறிக்கோள் இருக்கிறது' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போட்டோவில் அவர் வெறும் மேல் சட்டை மட்டும் அணிந்து பேன்ட் ஏதும் போடாமல் இருக்கிறார்.

ரெட்டை ஜடை

ரெட்டை ஜடை

'உங்க ஹாட் போட்டோ கொரோனாவை கொன்னுடும்' என்று ஒரு ரசிகரும், ஆரம்பத்தில் எப்படி இருந்தீங்களோ, அதே எனர்ஜியோட இப்பவும் இருக்கீங்களே எப்படி? என்று சிலரும் அவரிடம் கேட்டுள்ளனர். சிலர், இந்தியன் 2 அப்டேட் கேட்டுள்ளனர். இன்னும் சிலர் அவரை கண்டபடி கலாய்த்துள்ளனர். ரெட்டை ஜடை போட்டாலும் ஆண்டி ஆண்டிதான் என்று ஒருவர் கூறியுள்ளார்.

காரணமில்லாமல் மகிழ்ச்சி

காரணமில்லாமல் மகிழ்ச்சி

சிலர், 'கொரோனா பீதியில ஒவ்வொருத்தன் இருக்கான், நீங்க என்னடான்னா இப்படி சிரிச்சுட்டு இருக்கீங்களே? என்று கூறியுள்ளனர். இன்னொருவர், அதெல்லாம் முடியாது, காரணமில்லாம எங்களால மகிழ்ச்சியா இருக்க முடியாது' என்று கூறியுள்ளார், கொரோனா அலைஞ்சுகிட்டிருக்கு போய் தனியா உட்காருங்க என்று ஒருவர் அட்வைஸ் செய்துள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X