Kajal agarwal: மகனுக்காக காஜல் அகர்வால் செய்த தரமான சம்பவம்.. உண்மையான தாய்பாசம்னா இதுதான்!

சென்னை: தமிழ், தெலுங்கு,இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் நீண்ட நாள் நண்பரும் காதலருமான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்ட காஜல் அகர்வால் தனது மகனுக்கான தரமான செயல் ஒன்றை செய்துள்ளார். இதைக்கேட்டு காஜலின் பேன்ஸ் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

காஜல் அகர்வால் பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் ஓடாததால், தெலுங்கு பக்கம் சென்ற காஜல், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பெயர் எடுத்தார்.

kajal aggarwal interview

நடிகை காஜல் அகர்வால்: படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் அகர்வால் 2020ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு ஒரு குழந்தைக்கு தாயுமான நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

தற்போது காஜல் அகர்வால், இந்தியன் 3 படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் உருவாகி வரும் கண்ணப்பா என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் கமிட்டாகி உள்ளார். மேலும, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்திலும் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

காஜர் அகர்வால் பேட்டி: இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த காஜல் அகர்வால், தாய்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசி உள்ளார். அதில்,எனக்கு குழந்தை பிறந்த நேரத்தில் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது, அதை தவிர்க்க முடியாமல் போனது, அதன் படப்பிடிப்பு திருப்பதியில் இருந்து கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பயணம் செய்து, ஒரு சின்ன கிராமத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த கிராமத்திற்கு குழந்தையை அழைத்து செல்ல முடியாது என்ற காரணத்தினால், மகன் நீலை திருப்பதி வரை அழைத்து வந்து தன்னுடைய பெற்றோருடன் தங்க வைத்துவிட்டு,படப்பிடிப்புக்கு சென்றேன்.

பாரட்டும் பேன்ஸ்: செல்லும் வழியில் இரண்டு மணி நேர பயண தூரத்தில் ஒரு இடத்தில் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடைய தாய்ப்பாலை எடுத்து ஒரு கார் டிரைவரிடம் கொடுத்து அனுப்பினேன். இப்படி இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என குழந்தைக்காக படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடியே தாய்ப்பாலை அனுப்பினேன்.ஏன் என்றால் தாய் பால் என்பது குழந்தைகளுக்கு முக்கியமான ஒன்று என்று காஜல் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அழகு கெட்டுவிடும் என்ற காரணத்தினால் இன்று பல பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கும் பெண்கள் இருக்கும் இந்த காலத்தில் நடிகை காஜல் அகர்வால் செய்த இந்த செயலை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X