நடிகை காஜல் நிஜமாவே அம்மாவாக போகிறார்.. மனைவியின் கர்ப்பத்தை அம்பலப்படுத்திய கணவர்!
சென்னை: திருமணத்திற்கு பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்து வந்த நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாகி விட்டார் என்றும் விரைவில் அம்மாவாக போகிறார் என்றும் வதந்திகள் பரவின.
ஆனால், தான் கர்ப்பமாக வில்லை என ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து பதிலடி கொடுத்து வந்தார் காஜல் அகர்வால்.
ஆனால், புத்தாண்டை முன்னிட்டு அவரது கணவர் கெளதம் கிட்சுலு தனது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காஜல் அகர்வால்
2004ம் ஆண்டு க்யூன் ஹோ கயா எனும் இந்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். 2007ம் ஆண்டு தெலுங்கில் லக்ஷ்மி கல்யாணம் படத்தில் நாயகியாக அறிமுகமானார். 2008ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் காஜல் அகர்வால்.

விஜய், சூர்யா, அஜித்
டோலிவுட், பாலிவுட் என நடித்து வந்த காஜல் அகர்வால் கோலிவுட்டில் விஜய், சூர்யா, அஜித், தனுஷ், ஜெயம் ரவி மற்றும் விஷால் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார். விஜய் உடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் ஜோடி போட்டு நடித்த காஜல் அகர்வால் அஜித் உடன் விவேகம் படத்திலும் சூர்யாவுடன் மாற்றான் படத்திலும் இணைந்து நடித்துள்ளார்.

தொழிலதிபருடன் திருமணம்
கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் கிட்சுலுவுடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். ஹனிமூனுக்கு கணவருடன் மாலத்தீவு சென்று இருந்தார் காஜல் அகர்வால்.

கர்ப்ப வதந்தி
திருமணம் ஆகி ஓராண்டு ஆன நிலையில், நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார் என கொளுத்திப் போட்டனர். காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் சீக்கிரமே தனது அக்கா அம்மாவாக வேண்டும் என வெளிப்படையாகவே தனது விருப்பத்தை தெரிவித்தார்.

காஜல் அகர்வால் கர்ப்பம்
ஆனால், தான் கர்ப்பமாக இல்லை என கடந்த 2021ம் ஆண்டு மறுத்து வந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாகி உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது கணவர் கெளதம் கிட்சுலு புத்தாண்டை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு புதிய உறவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என குறிப்பிட்ட அவர் கர்ப்பமாக இருக்கும் எமோஜியை போஸ்ட் செய்துள்ளார்.
Recommended Video

ரசிகர்கள் வாழ்த்து
பான் இந்திய நடிகையான காஜல் அகர்வால் கூடிய விரைவில் குழந்தையை பெற்றெடுத்து அம்மாவாக உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் வெளியேறிய நிலையில், அவர் நடிப்பில் உருவாகி உள்ள பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, ஆச்சார்யா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











