Kajal aggarwal: காஜல் அகர்வாலுக்கு பிடித்த நடிகர்கள்.. விஜய் பேர் இல்லாமலா!

சென்னை: நடிகை காஜல் அகர்வால் பல ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். மிகவும் பிஸியாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த காஜல் அகர்வால் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் தன்னுடைய நடிப்பை விட்டு விடாமல் தொடர்ந்து வருகிறார் காஜல் அகர்வால்.

அவரது நடிப்பில் அடுத்ததாக கமல்ஹாசனுடன் அவர் இணைந்து நடித்துள்ள தக் லைஃப் படம் ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வாலின் கேரக்டரை தொடர்ந்து படக் குழுவினர் வெளிப்படுத்தாமல் உள்ளனர். இதனால் அவரது கேரக்டர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. படத்தின் ரிலீசின்போது தான் இவரது கேரக்டர் குறித்த ரகசியம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Kajal Aggarwal lists out her favourite actors in South india

நடிகை காஜல் அகர்வால்: நடிகை காஜல் அகர்வால் தமிழ். தெலுங்கு. ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து தன்னை கமிட் செய்து கொண்டு நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். விஜய்யுடன் துப்பாக்கி, மெர்சல் ஆகிய படங்களில் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்த ஜோடியின் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. திருமணமாகி ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார் காஜல் அகர்வால். இருந்தபோதிலும் தொடர்ந்து படங்களில் அவர் நடித்து வருகிறார்.

தக் லைஃப் படம்: தற்போது கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூலை மாதம் 17ம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட அளவில் நடத்தப்படவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியான சூழலில் எதிலும் காதல் அகர்வாலின் கேரக்டர் வெளிப்படுத்தப்படவில்லை. அவரது கேரக்டரை படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். இதனால் அவர் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காஜல் அகர்வால் பேட்டி: இந்தியன் படத்தில் நடிகை சுகன்யா மிகவும் வயதான கேரக்டரில் வயதான கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலின் கேரக்டர் அதுபோல அமைந்திருக்குமா என்று ரசிகர்கள் தொடர்ந்து யூகித்து வருகின்றனர். தன்னுடைய ஸ்லிம்மான உடல்வாகை தொடர்ந்து பராமரித்து வந்த காஜல் அகர்வால், திருமணமாகி குழந்தை பிறப்புக்கு பிறகு சிறிது குண்டடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தன்னுடைய பழைய ஃபிட்னஸை மீட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் தனக்கு பிடித்த நடிகர்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

காஜலுக்கு பிடித்த நடிகர்கள்: இதில் ராம்சரணை முதலில் குறிப்பிட்ட காஜல் அகர்வால் தொடர்ந்து, சமந்தா, ஜூனியர் என்டிஆர் மற்றும் விஜய் உள்ளிட்டவர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். விஜய்யுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த காஜல் அகர்வால், அவரை இந்த லிஸ்டில் சேர்த்து இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இந்தப் பேட்டியில் காஜலுக்கு பிடித்த 3 நடிகர்களை மட்டுமே இன்டர்வியூ செய்தவர் கேட்டிருந்தார். முதலில் 3 பேரை குறிப்பிட்ட காஜல் அகர்வால், தொடர்ந்து விஜய் பேரையும் அதில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X