Kajal Aggarwal: ஸீ-த்ரூ புடவையில் அட்ராசிட்டி செய்த காஜல் அகர்வால்.. இவ்ளோ அடக்கவொடுக்கமா?
சென்னை: நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து முடித்துள்ளார்.
திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாயான நிலையிலும் தன்னுடைய அழகையும் கவர்ச்சியையும் அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார் காஜல் அகர்வால்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் காஜல் அகர்வால் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
நடிகை காஜல் அகர்வால்: நடிகை காஜல் அகர்வால் விஜய்யுடன் துப்பாக்கி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து அதிகமான ஹிட்களை கொடுத்துள்ளார். விஜய்யுடன் மட்டுமில்லாமல் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம்வந்த காஜர் அகர்வால் தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவரது கேரக்டர் மிகவும் பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புது வீட்டு கிரஹப்பிரவேசம்: தெலுங்கில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக் கொண்ட காஜலுக்கு நீல் என்ற மகன் உள்ளார். சமீபத்தில் மும்பையில் புதிய வீடு வாங்கி செட்டிலாகியுள்ளார் காஜல். இந்த வீட்டின் கிரஹப்பிரவேச வீடியோக்களை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.
அடுத்தடுத்த படங்கள்: அடுத்ததாக மகேஷ்பாபு -ராஜமௌலி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் காஜல் அகர்வால்தான் வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ராஜமௌலி இயக்கத்தில் மகதீரா படத்தில் நாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த காஜல், மீண்டும் அவரது இயக்கத்தில் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படம்: தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ள காஜல் அகர்வால், தொடர்ந்து படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக திருமணத்திற்கு பிறகு காஜல் படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து நடித்துவருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் அவர் தொடர்ந்து ஆக்டிவாக இருந்துவருவதும் அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
போட்டோஷுட் புகைப்படங்கள்: இந்நிலையில் தற்போது ஸீ-த்ரூ புடவையில் விதவிதமாஸ் போஸ்களுடன் போட்டோஷுட் எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் பகிர்ந்துள்ளார். இதன் கேப்ஷனில் சிம்பிசிட்டி என்று பதிவிட்டுள்ளார். ஆனாலும் எளிமையாக இல்லாமல் அதிகமான கவர்ச்சி தூக்கலுடன் இந்த புகைப்படங்களில் காஜல் அகர்வால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். கிராண்டான அணிகலன்களுடன் இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் Just Looking like WOW என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











