முதல்ல துப்பட்டாவை போடுங்கம்மா.. ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போலிருக்கு.. காஜலுக்கு ஃபேன்ஸ் அட்வைஸ்
Recommended Video
சென்னை: நடிகை காஜல் அகர்வால் சிவப்பு நிறத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.
தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். தமிழில் அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

85 வயது பாட்டி
இதற்கிடையே, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் 85 வயது பாட்டியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் வரும் 8 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது. இதில் நடிப்பதற்காக காஜலுக்கு சிறப்பு மேக்கப் போடப்படுகிறது. இந்தியில் அவர் நடித்துள்ள மும்பை சாகா படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.

ரொமான்டிக் காமெடி
இதை அடுத்து துல்கர் சல்மான் ஜோடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க இருக்கிறார். இதை நடன இயக்குனர் பிருந்தா இயக்க உள்ளார். அதில் மற்றொரு ஹீரோயினாக அதிதி ஹைதாரியும் நடிக்கிறார். ரொமான்டிக் காமெடி கதையான இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.
மேடம் டுசாட்ஸ்
இதற்கிடையே, சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை நாளை பிரமாண்ட விழாவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது. இதற்காக காஜல் அகர்வால் அங்கு சென்றுள்ளார். தென்னிந்திய சினிமா நடிகைகளிலேயே முதன் முறையாக நடிகை காஜல் அகர்வாலுக்குத் தான் இந்த பெருமை கிடைத்திருக்கிறது. இதுகுறித்த ரிமைண்டர் வீடியோவை ரசிகர்களுக்காக அவர் பகிர்ந்துள்ளார்.
தலைவலியல்ல
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இது தலைவலியல்ல என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். அதோடு சரமாரியாக கமென்ட்டும் போட்டுள்ளனர்.
ஹார்ட் அட்டாக்
'இது தலைவலியல்ல என்று நீங்கள் கேப்ஷன் கொடுத்திருக்கிறீர்கள். இதைப் பார்த்தால் எங்களுக்குத்தான் தலைவலி என்று சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டோவை பார்த்தபிறகு எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு சில ரசிகர்கள் கடுமையாக கலாய்த்தும் உள்ளனர். முதல்ல துப்பாட்டாவை போடுங்க தோழி என்று ஒரு ரசிகர் நாகரிமாகக் கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











