Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
“பூமி தொடாத..குழந்தையின் பாதம்“… காஜல் அகர்வாலின் க்யூட் பேபி போட்டோ!
சென்னை : நடிகை காஜல் அகர்வால் தனது குழந்தையின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கடந்த 2008 -ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். ஆனால், அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை
இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்து வசூலில் சாதனை படைத்தது.
நான் பாலாவின் உதவி இயக்குனர் கிடையாது.. அவருக்கு நான் தங்கை... சுதா கொங்கரா!

காஜல் அகர்வால்
மகதீரா படத்திற்கு வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

திருமணம் செய்து கொண்டார்
படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது ஹனிமூன் புகைப்படங்களும், ரொமாண்டிக் புகைப்படங்களும் அவ்வப்போவது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தன.

ஆண் குழந்தை பிறந்தது
காஜல் அகர்வால் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் காஜல் அகர்வால் கிச்லு தம்பதிக்கு இறைவனின் ஆசிர்வாதத்துடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்திருந்தனர். ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பூமி தொடாத..குழந்தையின் பாதம்
இந்நிலையில், காஜல் அகர்வால் தனது ட்விட்டரில் பக்கத்தில் குழந்தையின் பாதம் மட்டுமே தெரியும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். குழந்தையை காஜல் அகர்வால் தூக்கிவைத்து கொண்டு இருக்க, குழந்தையின் பிஞ்சு பாதம் மட்டும் தெரிகிறது. அந்த காலில் கண் திஷ்டிகயிறு ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த புகைப்படத்திற்கு "The sweetest (tiny) things" என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவித்து வருகின்றன.
Recommended Video

அன்னையர் தினத்தில்
முன்னதாக காஜல் அகர்வால் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாகப் பகிர்ந்து இருந்தார். அந்தப் புகைப்படத்திலும் குழந்தையின் தலை மட்டும் தெரியும். முகம் தெரியாது. அந்த படத்துடன் ஒரு நீண்ட பதிவையும் காஜல் அகர்வால் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.