ஒரே ரொமான்ஸ் மூடு தான்.. மாலத்தீவில் ஹனிமூன்.. நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!

சென்னை: நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.

சமீபத்தில், தொழிலதிபர் கவுதம் கிட்சிலு என்பவரை மணந்து கொண்ட காஜல் அகர்வால், மாலத்தீவில் தங்களது ஹனிமூனை கொண்டாடி வருகிறார்.

காஜல் அகர்வால் திருமணம்

கடந்த மாதம் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில் நடிகை காஜல் அகர்வால் பிரபல தொழிலதிபரான கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார். பாலிவுட், கோலிவுட், மற்றும் டோலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகை காஜல் அகர்வாலை வாழ்த்தினர்.

View this post on Instagram

Calm before the storm 🤍#kajgautkitched

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

திருமண புகைப்படங்கள்

திருமணம் குறித்த அறிவிப்பில் இருந்து, திருமண சடங்குகள் தொடங்கி, ஏகப்பட்ட திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி வைத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார் நடிகை காஜல் அகர்வால். மகராணி போல காஜல் சிகப்பு நிற திருமண லெஹங்காவில் ஜொலித்ததை ரசிகர்கள் கண் கொட்டாமல் பார்த்தனர்.

மேட்சிங் மாஸ்க்

திருமணத்திற்கு பிறகு மஞ்சள் நிற சேலை அணிந்த காஜல் அகர்வால் அதற்கு மேட்சிங்காக மஞ்சள் நிற வேலைப்பாடுகள் நிறைந்த மாஸ்க்கை அணிந்து கொண்டும், மாப்பிள்ளை கவுதம், வெள்ளை நிற குர்தாவுக்கு மேட்சிங்கான மாஸ்க்கை அணிந்து கொண்டும் போஸ் கொடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

மேரேஜ் பார்ட்டி

திருமணத்திற்கு பிந்தைய பார்ட்டிக்காக நடிகை காஜல் அகர்வால் பிரத்யேக வேலைப்பாடுகள் நிறைந்த க்ரீம் கலர் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து, தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார். அதே உடையில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் மறக்காமல் ஷேர் பண்ணார்.

மாலத்தீவில் ஹனிமூன்

இந்தியன் 2, ஹே சினாமிகா என தமிழில் இரு படங்களை கை வசம் வைத்திருக்கும் நடிகை காஜல் அகர்வால், இந்த லாக்டவுனில் கவுதமுடன் ஏற்பட்ட காதல் காரணமாக திடீரென திருமணம் செய்து கொண்டார். மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ள காஜல், அங்கே இருந்தும் ஏகப்பட்ட ரொமான்டிக் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

View this post on Instagram

@conrad_maldives you beauty 😍

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

செம ஹாட்

காஜல் அகர்வாலின் படங்களில் எப்போதுமே கவர்ச்சிக்கு பஞ்சமே இருந்தது இல்லை. இந்நிலையில், கணவர் கவுதமுடன் மாலத்தீவு கடற்கரையில் இருவரும் அடிக்கும் லூட்டி புகைப்படங்களை தற்போது ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். சிகப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட்டாக இருக்கிறார் காஜல் அகர்வால்.

View this post on Instagram

@conrad_maldives you beauty 😍

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

கால்கள் மட்டுமே

கடற்கரையில் கடலை பார்த்தபடி ஜாலியாக அமர்ந்து கொண்டு, தனது கால்கள் மட்டுமே தெரியும் படி வித்தியாசமாக எடுத்துள்ள புகைப்படத்தையும் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். மெஹந்தி ஃபங்கஷனுக்காக போடப்பட்ட மருதாணி இன்னமும் சிவந்தபடியே இருப்பதை பார்த்த ரசிகர்கள் புது ஜோடிகளை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X