வெளிநாட்டில் கணவருடன் லூட்டி அடிக்கும் காஜல் அகர்வால்.. லைக்குகளை அள்ளும் போட்டோஸ்!

சென்னை: தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் நடிகை காஜல் அகர்வால். தமிழிலும் தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பெரும் ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார். தனது அழகான முகபாவனைகள், அட்டகாசமான நடிப்பு, கவர்ச்சியான திரை நடைகள் என அனைத்திலும் காஜல் தனித்துவம் கொண்டவராக இருக்கிறார். தற்போது காஜல் அகர்வால் தனது கணவருடன் வெளிநாட்டில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் 2007ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர், மாரி, துப்பாக்கி, மெர்சல், ஜில்லா, விவேகம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தெலுங்கு திரைப்படங்களிலும் மகதீரா, டார்லிங், மிஸ்டர் பெர்ஃபெக்ட் போன்ற படங்கள் அவரது கேரியரில் முக்கியமான மைல்கற்களாக அமைந்தன.

Kajal Aggarwal photo
Photo Credit:

நடிகை காஜல் அகர்வால்: 2020ஆம் ஆண்டு காஜல் தனது நீண்ட நாள் காதலர் கவுதம் கிச்ச்லூவை திருமணம் செய்து கொண்டார். 2022ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்குப் பின் பல நடிகைகள் சினிமாவிலிருந்து விலகி விடுவார்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகும், தனது நடிப்பை தொடர்ந்து வருகிறார். தற்போது அவர் I'M Game, ராமாயணா, தி இந்தியா ஸ்டோரி, இந்தியன் 3 உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் கண்ணப்பா திரைப்படத்தில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

கணவருடன் லூட்டி: அண்மையில் நடிகை காஜல் அகர்வால், ஆஸ்திரேலிய கடற்கரையில் எடுக்கப்பட்ட சில கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மென்மையான கடற்கரை ஒளியில், இயற்கையுடன் இணைந்து புன்னகையும் தனது கணவருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் சிவப்பு நிற உடையில் மிகவும் ஸ்டைலாக சற்று கவர்ச்சியுடன் இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் பல தரப்பட்ட கருத்துக்களை கூறிவருகின்றனர். காஜலில் தீவிர ரசிகர் ஒருவர், காஜல் இன்னும் அதே அழகுடன் இருக்கிறார். "மகனுடன் குடும்ப வாழ்க்கையும் நடிப்பு பயணமும் எப்படி சீராக தொடர்கிறார் என்பது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது" இணையவாசிகள் கேட்டு வருகின்றனர். காஜல் தனது சமூக ஊடகத் தொடராளர்களோடும் நேரடியாக உரையாடும் முறையால் காஜல் இப்போதும் ரசிகர்களுக்கு மிக நெருக்கமான பிரபலமாக திகழ்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X