கிடைத்த கேப்பில் ஜாலி ட்ரிப்... மாலத்தீவில் காஜல்...கூட யாரு இருக்கா பாருங்க?

By

சென்னை: நடிகை காஜல் அகர்வால், படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைத்த கேப்பில் மாலத்தீவு சென்றுள்ளார்.

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இதில் வயதான கேரக்டரில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

மாலத்தீவு

மாலத்தீவு

மும்பை சாகா என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையே, படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைத்த கேப்பில், குடும்பத்துடன் ஜாலியாக மாலத்தீவுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிஷா அகர்வால்

நிஷா அகர்வால்

அதில், அவரது அப்பா வினய், அம்மா சுமன், தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வால், அவரது கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் உள்ளனர். நிஷா, தமிழில் இஷ்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

இதைவிட சிறப்பாக...

இதைவிட சிறப்பாக...

அந்தப் புகைப்படத்துக்குக் கீழே, நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடுமுறை கிடைத்து விட்டது. அதற்கு மாலத்தீவில் உள்ள இந்த ரிசார்ட்டை தவிர வேறெதுவும் சிறப்பாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆர்யா, சாயிஷா

ஆர்யா, சாயிஷா

சமீப காலமாக மாலத்தீவுக்கு நடிகர், நடிகைகள் குடும்பத்துடன் செல்வது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் இந்தி நடிகைகள்தான் இங்கு செல்வது வழக்கம். இப்போது தமிழ், நடிகர், நடிகைகளும் அதிகமாகச் செல்லத் தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், மனைவி சாயிஷாவுடன் அங்கு ஆர்யா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X