கல்யாணத்துக்கு ரெடியான காஜல்.. ஆனால் இவ்வளவு கண்டிஷனா?
நடிகை காஜல் அகர்வால், திருமணம் குறித்த கேள்விக்கு, விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால், தனக்கு வரவேண்டிய மணமகன் எப்படி இருக்க வேண்டும் என்ற சில கண்டிஷன்களையும் போட்டுள்ளார்.
ஐதராபாத்: தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலிடம் எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கூடவே, மாப்பிள்ளை எப்படி இருக்கணும் என்கிற சில கராரான கண்டிஷன்களையும் போட்டுள்ளார்.

85 வயது பாட்டி
34 வயதாகும் காஜல் அகர்வால், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக 85 வயது பாட்டி வேடத்தில் நடித்து வருகிறார். இந்தியன் முதல் பாகத்தில் நடிகை சுகன்யா நடித்த வேடத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குயின் எப்போது
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் பாலிவுட் படமான குயின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் லீடு ரோலில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஏப்ரல் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பாரிஸ் பாரிஸ் திரைப்படம் இதுவரை வெளியாகாமல் உள்ளது. எப்போது ரிலீஸ் ஆகும் என்ற அப்டேட்டும் இல்லை.

துப்பாக்கி 2
விஜய்யின் பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்துள்ளது. திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், துப்பாக்கி 2 குறித்த சிக்னலை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வாலும் துப்பாக்கி 2 படத்திற்காக வெயிட்டிங்.

கண்டிஷன்
Voot ஸ்ட்ரீமிங் தளத்தின் 'Feet Up with the Stars Telugu' நிகழ்ச்சியில் நடிகையும் தொகுப்பாளினியுமான லக்ஷ்மி மஞ்சு, காஜல் அகர்வாலை பேட்டியெடுத்தார். அப்போது, திருமணம் எப்போது என்ற கேள்வியை எழுப்ப, விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என சட்டென பதிலளித்த காஜல் அகர்வால், தனக்கு வரவிருக்கும் மணமகன் எப்படி இருக்க வேண்டும் என்ற சில கண்டிஷன்களையும் போட்டுள்ளார்.
தன்னை போலவே மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும், தன் மீது மிகுந்த பொறாமை கொண்டவராகவும், தன்னை எப்போதும் அக்கறையுடன் பார்த்துக் கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த தகுதிகள் உங்களிடம் இருந்தால், சீக்கிரம் நேரில் காஜல் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டு விடுங்கள்.


Click it and Unblock the Notifications











