சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய பிக்பாஸ் பிரபலம்.. இருந்தாலும் தலைவிதான் கெத்து !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை, சில்க் ஸ்மிதாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் வெளியான சிறிது நேரத்திற்குள் லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.
சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர்கள், என்ன இருந்தாலும் தலைவிதான் கெத்து என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை சில்க் ஸ்மிதா
நடிகை சில்க் ஸ்மிதா நடித்த காலகட்டத்தில் தமிழ் திரை உலகில் கனவுக் கன்னியாக வலம் வந்தார். நடிகை சில்க் ஸ்மிதா இடம்பெற்றாலே விநியோகஸ்தர்களிடம் திரைப்படங்கள் விற்று தீர்ந்தன. திரையரங்குகளிலும் அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. அவர் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் அளவிற்கு வேறு எந்த நடிகையும் இதுவரை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

கிளாமர் போஸ்
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை காஜல் பசுபதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், சில்க் ஸ்மிதா போல உடை அணிந்து மழையில் நனைந்தபடி கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார். மேலும், அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, என் தலைவி மாதிரி யாராலும் வர முடியாது. இருந்தாலும் தலைவிபோல try பண்ணேன் என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை காஜல் பசுபதி
அந்த போட்டோ வெளியான சிறிது நேரத்தில், பல லைக்ககளை குவித்து வருகிறது. நடிகை காஜல் பசுபதி, சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன்பின், வசூல் ராஜா திரைப்படத்தில் நர்சாகவும், டிஷ்யூம், கள்வனின் காதலி திரைப்படத்திலும் ஒரு சில கதாபாத்திரங்கிலும் நடித்துள்ளார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்
மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் 60 நாட்களுக்கு மேல் இருந்தார். மானாட மயிலாட நிகழ்ச்சியின் போது நடன இயக்குநர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்துவிட்டார். தற்போது சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











