ஒரு ஃபோன் கால் வந்துச்சு.. அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டார்கள்.. ஷாக் கொடுத்த காஜல்
சென்னை: நடிகை காஜல் பசுபதி சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு சில படங்களில் நடித்தார். கோ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் நடன அமைப்பாளர் சாண்டியின் முன்னாள் காதலி ஆவார். இருவரும் இப்போது பிரிந்துவிட்டார்கள். சாண்டியை பிரிந்த காஜல் அடுத்ததாக இன்னொருவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். அந்த உறவும் பாதியில் முடிவடைந்துவிட்டது. இந்தச் சூழலில் தனது வாழ்க்கையில் நேர்ந்த மோசமான அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார் காஜல் பசுபதி.
சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஜொலித்தவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். இப்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன், முன்னணி நடிகையாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர், ஹீரோ ப்ளஸ் காமெடியனாக கலக்கிவரும் சந்தானம், யோகிபாபு உள்ளிட்டோர் எல்லாம் சின்னத்திரையில்தான் தங்களது வாழ்க்கையை தொடங்கினார்கள். இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக அவர்கள் வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

காஜல் பசுபதி: அவர்களைப் போல்தான் நடிகை காஜல் பசுபதியும் சின்னத்திரையில் அறிமுகமானார். தனியார் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் ஃபேமஸ் ஆன அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி கோ உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையே இப்போது படு ஃபேமஸாக இருக்கும் நடன அமைப்பாளர் சாண்டியை காதலித்தார் காஜல் பசுபதி.
இரண்டு பிரிவுகள்: ஆனால் சாண்டியுடனான காஜலின் காதல் பாதியில் முடிந்தது. சாண்டியை பிரிந்த காஜல் சிறிது காலம் சிங்கிளாக இருந்துவிட்டு இன்னொருவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். அந்த உறவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க இடையில் கொஞ்ச காலம் அமைதியாக இருந்தவர் இப்போது பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை குறித்து பேசியிருக்கிறார்.
காஜல் பசுபதி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிடுபவர்கள் ஒரு பெண் சிங்கிளா இல்லை ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். எப்போதும் அவர்கள் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றித்தான் பேசுவார்கள். நாமாக சென்று வாய்ப்பு கேட்டால் அப்படி நடக்கும். அவங்களாகவே தொடர்புகொண்டு வாய்ப்பு பற்றி பேசும்போது இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்னை கம்மியாகத்தான் இருக்கும்.
எனக்கு வந்த ஃபோன்: சன் மியூசிக்கில் வேலை பார்த்த நேரத்தில் நான் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது எனக்கு ஒரு ஃபோன் வந்தது. அதில், 'நீ அட்ஜஸ்ட்மெண்ட் செஞ்சாதான் இந்தப் படத்தில் உனக்கு வாய்ப்பு' என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள். நான் உடனே, அதை செய்ய வேற ஆள் இருக்கிறார்கள். அவங்களை வெச்சுக்கோங்க என்று நான் சொல்லிவிட்டேன். இந்த மாதிரியெல்லாம் என்னிடம் கேட்டு வரும்போது, க்ளீன் ப்ராஜெக்ட்டாக இருந்தால் சொல்லுங்கள்; பேமெண்ட்டில் அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். மற்ற விஷயங்களுக்கு நோ என்று தெளிவாக சொல்லிவிடுவேன்.
முதலில் ஆரம்பிப்பது: நாமாக வாய்ப்பு தேடி சென்றால் இயக்குநரிடம் நேரடியாக பேசப்போறது கிடையாது. அவரிடம் மேனேஜர் என்று ஒருவர் இருப்பார். அவர்தான் இதை முதலில் ஆரம்பிப்பார். நீங்க நேரில் வாங்க பார்த்துக்கலாம் என்று எவர் ஒருவர் சொல்கிறாரோ அவர் கண்டிப்பாக அட்ஜஸ்ட்மெண்ட்டுக்காகத்தான் வர சொல்வார். நேரில் பார்த்தால்தான் ப்ராஜெக்ட் தருவேன் என்று சொல்கிறவர்கள் ஏமாற்றுபவர்களாகத்தான் இருப்பார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











