ஒரு செகண்ட் ஷாக்கான கஜோல்.. தொடக்கூடாத இடத்தில் தொட்டாரா பாடிகார்டு.. பிரபலம் இப்படி சொல்லிட்டாரே!

மும்பை: வடக்கு மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்டமான துர்கா பூஜையில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டதால், இந்த பூஜை தொடர்பான புகைப்படங்கள் தொடங்கி வீடியோக்கள் வரை அனைத்தும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான காஜோல், ராணி முகர்ஜி, அயன் முகர்ஜி, ஆலியா பட், அஜய் தேவ்கன் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

இந்த கொண்டாட்டத்தின் நடுவே எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த வீடியோ வைரலானது மட்டும் இல்லாமல் இது தொடர்பாக பலருக்கும் பல அனுமானங்களை உருவாக்கிவிட்டது. அதாவது, இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், காஜோல் இடம்பெற்ற ஒரு வீடியோ ரசிகர்களால் எதிர்பார்க்காத ஒரு காரணத்திற்காக வேகமாக பரவி வருகிறது. .

பரவி வரும் அந்த வீடியோவில், தசமி சடங்குகளுக்கு பிறகு காஜோல் படிக்கட்டுகளில் இறங்கும் போது, சற்றே தடுமாறுவது போன்ற காட்சி உள்ளது. அப்போது, அவருடைய பாதுகாவலர் என்று நம்பப்படும் ஒரு நபர் விரைந்து வந்து அவரைப் பிடிக்கிறார். அப்போது கஜோலின் கண்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக விரிகிறது. இதில் என்ன பிரச்னை என்றால், அந்த நபர் கஜோலைத் தொட்ட விதம் தான் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். அதை "பேட் டச்" என்று விமர்சித்து வருகிரார்கள்.

Actress Kajol Durga Puja Video Goes Viral After Man Inappropriately Touches Her- Umair Sandhu Shares Video

ஷாக்கான வீடியோ: பிரபல விமர்சகரும் வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினருமான உமர் சந்து தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, கஜோலின் பாதுகாவலர் கஜோலின் உடல் அங்கங்களை பிடிக்கிறார். அதனால் கஜோல் அதிர்ச்சி அடைகிறார் என்று கேப்ஷன் இட்டுள்ளார். அவர் கேப்ஷன் போட்டது மட்டும் இல்லாமல், அவரது கேப்ஷனுக்கு மிகவும் ஆட்சேபனைக்குரிய எமோஜிகளையும் இட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரசிகர்கள் கருத்து: இந்த வீடியோ குறித்து இணையவாசிகள் பலவிதமாக கருத்து தெரிவித்துள்ளனர். சில இணையவாசிகள் அது காஜோல் விழாமல் தடுக்க பாதுகாவலர் செய்த ஒரு செயல் என்று பதிவிட்டனர். வீடியோ பரவ ஆரம்பித்ததும், "அந்த நபர் யார்?", "இந்த வீடியோ உண்மையா?" போன்ற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பினர்.

பாதுகாவலர்: ஒரு இணையவாசி "அருவருப்பானது" என்று பதிவிட்டார். அதே சமயம், பல இணையவாசிகள் அந்த நபர் காஜோலின் தனிப்பட்ட பாதுகாவலர் என்றும், பொது நிகழ்ச்சிகளில் அவருடன் அடிக்கடி காணப்படுவார் என்றும் தெளிவுபடுத்தினர். இதற்கிடையில், ஒரு சில இணையவாசிகள் இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதோ அல்லது மாற்றப்பட்டதோ இருக்கலாம் என்றும் சந்தேகமாக கேட்டனர்.

கைகளைத்தான் பிடிக்கிறார்: ஆனால் வீடியோவை பார்க்கும்போது அவர் கஜோலின் கையைத்தான் பிடித்து நிறுத்துகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் சில ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் உமர் சந்துவின் கேப்ஷனுக்கும் அதற்கு அவர் பயன்படுத்தி உள்ள இமோஜிகளுக்கும் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X