Kajol: விஜய்யையே ஓரம் கட்டிய பாலிவுட் நடிகை.. திருமண விஷயத்தில் இதெல்லாம் இருக்கணுமாம்!
மும்பை: பிரபலங்கள் என்றாலே அவர்களின் பொது வாழ்க்கை தொடங்கி தனிப்பட்ட வாழ்க்கை வரை அனைத்தின் மீதும் ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும். அதாவது பிரபலங்கள் லேசாக தும்மினாலே அதற்கு ஆயிரம் அர்த்தங்களை சொல்லிவிடுகிறார்கள் இன்றைய நெட்டிசன்கள். அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது.
அதாவது பாலிவுட் நடிகை கஜோல் பலருக்கும் பிடித்த நடிகை. தமிழில் அவர் நடித்த மின்சார கனவு படத்தை ரிப்பீட் மோடில் பார்த்தாலும் சலிக்காது எனலாம். இவருக்காகவே எழுதி உருவாக்கப்பட்ட பாடலாக வெண்ணிலவே பாடல் அமைந்தது எல்லாம் படத்தை மேலும் ரசிக்க ஒரு காரணமாக மாறிவிட்டது. தமிழில் அவர் வெகு சில படங்களே நடித்துள்ளார். இப்படி இருக்கையில் அவர் சமீபத்தில் திருமண உறவு குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் ஷாக் கொடுத்துள்ளது.

அதாவது அவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, திருமணம் குறித்த கேள்விக்கு, " திருமணங்கள் காலாவதி தேதியுடன், மீண்டும் புதுப்பித்தல் தேதியுடன் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி நடக்கும் போது யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. மனகஷ்டங்கள் வராது" என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து குறித்த பேச்சுத்தான் தற்போது பாலிவுட் உலகம் முழுவதும் ஓடிக் கொண்டு உள்ளது.
சர்ச்சை கருத்து: அதற்கு காரணம் கஜோல் ஏற்கனவே பாலிவுட் நடிகர் அஜய் தேவகனை திருமணம் செய்துள்ளார். இவர்கள் கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 26 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த ஜோடி மீது ரசிகர்களுக்கு எப்போதும் தனி மதிப்பு உள்ளது. இப்படி இருக்கையில் நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்து, திருமணங்கள் காலாவதி தேதியுடனும், மீண்டும் புதுப்பித்தல் தேதியுடனும் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி நடக்கும்போது யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. மனகஷ்டங்கள் வராது என்று தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலர் இவர்களுக்கு இடையில் என்ன பிரச்னை என்று கேட்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் சந்தேகம்: மேலும் சிலரோ கஜோலுக்கும், அஜய் தேவ்கனுக்கும் இடையில் பல பிரச்னைகள் வந்திருக்கும் போல, அதன் வெளிப்பாடாகத்தான் இது இருக்கும் என்றும் சிலர் பேசி வருகிறார்கள். கஜோல் இவ்வாறு தெரிவித்ததை கவனித்த தமிழ் சினிமா ரசிகர்களோ, கஜோல் சொல்லும் ஐடியா, பிரியமானவளே பட இளைய தளபதி விஜய் போடும் ஒப்பந்தத்தை விடவும் சிறப்பாக இருக்கிறதே என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இளைய தளபதி விஜய்: பிரியமானவளே படத்தில் சிம்ரனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் ஒரு ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி இருப்பார் விஜய். ஒரு ஆண்டு முடிந்ததும் இருவரும் பிரிந்து விடுவார்கள். ஆனால் கஜோல் சொல்லி உள்ளதில், புதுப்பித்தல் எனும் வசதியும் இருப்பதால், இது பிரியமானவளே விஜய்யின் ஐடியாவை விட சிறப்பாக இருக்கிறதே என்று பேசி வருகிறார்கள். மொத்தத்தில் கஜோலின் இந்த கருத்து கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நல்ல ஐடியா என்றும் சிலர் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











