வார்த்தையால் ஒரு பொண்ண சாக அடிச்சிட்டீங்களே.. மனிதநேயம் இறந்துவிட்டதா? ஆதங்கப்பட்ட நடிகை!

சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், குழந்தையின் தாய் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை கல்யாணி வெளியிட்டுள்ள வீடியோவில், மனிதநேயம் இறந்து கொண்டிருக்கிறது, பச்சாதாபம் இறந்து கொண்டிருக்கிறது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த ரம்யா, சென்னையில் தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இவர்களது 7 மாத கைக்குழந்தை பால்கனியில் இருந்து தவறி விழுந்த நிலையில், அங்கிருந்த குடியிருப்புவாசிகள் பல முயற்சிகளை செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை மீட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

actress kalyani Emotional video about mother of the child who was rescued after falling from balcony committed suicide

திடீர் தற்கொலை: இதனையடுத்து, குழந்தையின் தாயை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வந்தனர். குழந்தையை சரியான முறையில் கவனிக்கவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. இதனால், குழந்தையின் தாய் ரம்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரம்யா அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் தங்கள் சொந்த ஊரான கோவை மாவட்டம் காரமடைக்கு வந்துள்ளார். அங்கு கடந்த சில வாரங்களாக குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம ரம்யாவின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சிகாக வெளியே சென்றிருந்த நிலையில், ரம்யா, திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கல்யாணி உருக்கமான வீடியோ: இதுகுறித்து நடிகை கல்யாணி வெளியிட்டுள்ள வீடியோவில், பால்கனியில் இருந்து தவறிவிழுந்த குழந்தையின் அம்மா தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்து இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது, நீ குழந்தையை சரியா பார்த்துக்கொள்ளவில்லை, நீ எல்லாம் ஒரு அம்மாவா என்று அவர்களை புல்லிங் செய்து அவர்களை இந்த முடிவை எடுக்க வைத்து இருக்கிறீர்கள். இது ஒரு விபத்து, அவர்கள் வேண்டும் என்றே செய்யவில்லை. எந்த தாயும் அப்படி செய்யமாட்டாள் என்பது குழந்தையை பெற்ற எல்லா பெண்களுக்கும் தெரியும்.

மனிதநேயம் இறந்துவிட்டது: ஏற்கனவே மன அழுத்தத்தில் இருப்பவர்களை திரும்ப திரும்ப காயப்படுத்தி பேசி கடைசியல் அவங்க இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள். இப்போ யாருக்கு கஷ்டம் அம்மாவை இழந்து வாழும் அந்த இரண்டு குழந்தைக்குத்தான் கஷ்டம். காலம் முழுக்க அந்த குழந்தைகள் அம்மா இல்லாமல் வாழ வேண்டும். அம்மா இல்லாமல் வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? தயவு செய்து ஒருத்தருக்கு உதவி செய்யவில்லை என்றாலும், அவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள் என்று பேசி உருக்கமாக உள்ளார். மேலும், இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக மனிதநேயம் இறந்து கொண்டிருக்கிறது, பச்சாதாபம் இறந்து கொண்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X