Kalyani priyadarshan: ஸ்கூல் டேஸ்ல கூட இப்படி படிச்சதில்லை.. பெருமூச்சு விட்ட கல்யாணி பிரியதர்ஷன்!
திருவனந்தபுரம்: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் என்ற பெருமையுடன் இவர் படங்களில் நடிக்க துவங்கினாலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தமிழில் சிம்புவுடன் இவர் நடித்திருந்த மாநாடு படம் கல்யாணிக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுத் தந்தது. அடுத்ததாக ஜெயம்ரவியுடன் ஜீனி படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன்: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெலுங்கில் ஹலோ என்ற படத்தின்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயன், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் கைக்கோர்த்த கல்யாணி பிரியதர்ஷன், தற்போது ஜெயம் ரவியுடன் ஜெனி என்ற படத்தில் நாயகியாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் 3 நாயகிகளுள் ஒருவராக கல்யாணி பிரியதர்ஷன் கமிட்டாகியுள்ளார்.
ஹலோ படத்தில் என்ட்ரி: நாயகியாக கமிட்டாவதற்கு முன்பு இந்தியில் வெளியான கிரிஷ் 3 என்ற படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகவும் தமிழில் விக்ரம் நடித்த இருமுகன் படத்தின் ஆர்ட் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார். இதை தொடர்ந்தே இவர் ஹீரோயினாக நடித்து ஹலோ படம் கடந்த 2017ம் ஆண்டில் வெளியானது. பெரிய இயக்குநரின் மகள் என்ற பின்புலத்தில் நடிக்க வந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.
அகில் அக்கினேனி ஜோடி: முதல் படமான ஹலோ படத்தில் அகில் அக்கினேனியுடன் இணைந்து நடித்திருந்தார் கல்யாணி. இந்தப் படத்தை நாகார்ஜூனாவே தயாரித்திருந்தார். விக்ரம் கே குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. தொடர்ந்து தென்னிந்திய அளவில் ஏராளமான பட வாய்ப்புகளும் கல்யாணிக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியான வகையில் பயன்படுத்திக் கொண்டார் கல்யாணி. இந்தப் படத்திற்காக சைமா விருது, பிலிம்பேர் விருது போன்றவை கல்யாணிக்கு கிடைத்தன.
சிவகார்த்திகேயன் ஜோடி: தமிழிலும் ஹீரோ படத்தின்மூலம் அறிமுகமான கல்யாணிக்கு அடுத்ததாக சிம்புவுடன் இணைந்து நடித்த மாநாடு படமே மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. மலையாளத்தில் மோகன்லால் மகன் பிரணவ்வுடன் கல்யாணி நடித்திருந்த ஹிருதயம் படமும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு மிகப்பெரிய வரவேற்பையும் அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ப்ரோ டாடி, தள்ளுமலா போன்ற படங்கள் கல்யாணி கேரியரில் மிகப்பெரிய படங்களாக அமைந்தவை.

சேஷம் மைக்கில் பாத்திமா படம்: இந்நிலையில் அடுத்ததாக தமிழில் ஜெயம்ரவியுடன் இணைந்து ஜீனி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 17ம் தேதி கல்யாணி நடிப்பில் வெளியான சேஷம் மைக்கில் பாத்திமா படத்தில் கமென்ட்ரி கொடுக்கும் பெண்ணின் கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த கல்யாணிக்கு மலையாளம் சரளமாக பேச வராத நிலையில் இந்தக் கேரக்டரை சேலஞ்சாக எடுத்துக் கொண்டு பின்னணி பேசியதாக உற்சாகம் தெரிவித்துள்ளார்.
சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்திற்கு கமெண்ட்: இந்நிலையில் இந்தப் படத்திற்காக பக்கம் பக்கமாக வசனங்களை மனப்பாடம் செய்த கல்யாணியின் க்யூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள கல்யாணி, தன்னுடைய பள்ளி நாட்களில் கூட தான் இதுபோல டெடிகேஷனுடன் படித்ததில்லை என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











