நூடுல்ஸ் மண்டை லிஸ்டில் இணைந்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்
பிரபல முன்னணி இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்
சமீபத்தில் வெளியான மாநாடு மற்றும் மரக்கர் உள்ளிட்ட படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்ற கல்யாணி பிரியதர்ஷன் இப்போது நூடுல்ஸ் மண்டை ஸ்டைலில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
பிரபல முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இப்பொழுது தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து அறிமுகமானார். இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்த ஹீரோ படத்தில் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்ற இவருக்கு மலையாளம்,தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிகிறது

சிம்புவின் வெறித்தனமான நடிப்பில்
இதுவரை எந்த ஒரு திரைப் படத்திலும் கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷன் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அந்தாலஜி திரைப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிம்புவின் வெறித்தனமான நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆயிஷா என்ற கதாபாத்திரத்தில்
அதேசமயம் மலையாளத்திலும் அதிக படங்களில் கவனம் செலுத்தி வரும் கல்யாணி பிரியதர்ஷன் நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரான மரக்கர் என்ற திரைப்படத்தில் ஆயிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சரித்திர பின்னணியில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் உருவான இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
Recommended Video

நூடுல்ஸ் மண்ட போட்டோஸ்
ப்ரோ டாடி,ஹரிதாயம்,தல்லுமாலா உள்ளிட்ட மலையாள படங்களில் தற்போது நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷன் இதுவரை எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டாமல் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் சூழலில் இப்பொழுது நூடுல்ஸ் போல சுருள் சுருளாக தலைமுடியை மாற்றிக்கொண்டு வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து நடிகர் துல்கர் சல்மான் யாருமா இந்த பொண்ணு அடையாளமே தெரியல என கலாய்த்துள்ளார் . அப்புறம் என்னப்பா நூடுல்ஸ் மண்ட லிஸ்ட்ல கல்யாணியையும் ஆட் பண்ணிக்கலாமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











