பேரல் பேண்ட் முழுக்கை சட்டை... புது விதமான பேஷனில் தோன்றிய கல்யாணி பிரியதர்ஷன்!
சென்னை: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்த ஹீரோ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்
இப்பொழுது சிம்புவுடன் இணைந்து மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணி மீண்டும் இணையும் ப்ரோ டாடி படத்திலும் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் இப்பொழுது பேரல் பேண்ட் மற்றும் முழுக்கை சட்டையுடன் புதுவிதமான பேஷனில் க்ளிக்கிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.

சூப்பர் ஹீரோவாக
தனது ஒவ்வொரு படங்களிலும் சமூகக் கருத்துக்களையும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளையும் தொடர்ந்து பதிவு செய்து வரும் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்த ஹீரோ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். பிரபல முன்னணி இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்துள்ளார்

அரசியல் கலந்த திரில்லர் கதைக்களத்தில்
தமிழில் இதுவரை ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இவருக்கு வெளியாகி இருந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. எனவே அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார் . இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அரசியல் கலந்த திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கியுள்ள மாநாடு திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இதில் முதன்முறையாக சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளது தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில்
லூசிஃபர் வெற்றியைத் தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணி இப்பொழுது மீண்டும் இணைந்து புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. அந்த படத்திற்கு ப்ரோ டாடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன்படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இதில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கலகலப்பான காமெடி படமாக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது
Recommended Video

பேரல் பேண்ட் முழுக்கை சட்டையுடனும் புதுவிதமான பேஷனில்
இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் அடுத்ததாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேரல் பேண்ட் மற்றும் வித்தியாசமான முழுக்கை சட்டையுடனும் புதுவிதமான பேஷனில் தோன்றியுள்ள புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி வைரலாகின்றன.


Click it and Unblock the Notifications











