Year end 2024: அபுதாபியில் இயர் எண்டை உற்சாகமாக கழிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்.. நண்பர்களுடன் லூட்டி!
சென்னை: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சிம்பு, ஜோடியாக மாநாடு படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்திலும் நடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி, கடந்த 2017ம் ஆண்டில் தெலுங்கில் ஹலோ படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார்.
கல்யாணி பிரியதர்ஷனின் கேரியர் பெஸ்ட் படமாக ஹிருதயம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் கல்யாணி தற்போது ஆண்டு இறுதி கொண்டாட்டத்திற்காக அபுதாபியில் தன்னுடைய நண்பர்களுடன் உள்ளார். இந்த கொண்டாட்டங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை கல்யாணி பிரியதர்ஷன்: பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன், கடந்த 2017ம் ஆண்டில் வெளியான ஹலோ படத்தின் மூலம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்து வரும் கல்யாணி, தமிழில் சிம்புவிற்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் ஹீரோ படத்தில் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
ரகசிய திருமணம்?: குறிப்பாக கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான ஹிருதயம் மற்றும் மாநாடு படங்கள் இவருக்கு மிகச் சிறப்பான அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தன. இவருக்கென தனியாக ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் அடுத்தடுத்து வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் கல்யாணி பகிர்ந்து வருகிறார். இதனிடையே கடந்த அக்டோபர் மாதத்தில் இவருக்கு ரகசியமாக திருமணம் நடந்ததாகவும் சின்னத்திரை நடிகரை இவர் திருமணம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆண்டு இறுதி கொண்டாட்டம்: அந்த நடிகருக்கு இது இரண்டாவது திருமணம் என்றும் கூறப்பட்ட நிலையில் இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் ஒரு விளம்பரத்திற்காக இந்த வீடியோ படமாக்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வரும் கல்யாணி, தற்போது அபுதாபியில் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஆண்டு இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வித்தியாசமான உணவுகள், வித்தியாசமான பொழுதுபோக்குகள் என இவர்களின் கொண்டாட்டம் அளவில்லாமல் நீண்டு வருகிறது.
அபுதாபியில் கல்யாணி பிரியதர்ஷன்: தன்னுடைய நண்பர்களுடனும் தனியாகவும் அடுத்தடுத்த புகைப்படங்களை கல்யாணி இந்த பதிவில் வெளியிட்டுள்ளார். உலகமே ஆண்டு இறுதி கொண்டாட்டத்திலும் புத்தாண்டை வரவேற்கவும் தயாராகி வரும் நிலையில், கல்யாணியின் இந்த பதிவு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. புதிய மனிதர்கள், வித்தியாசமான சூழல்கள் என இவரது இந்தப் பயணம் அவருக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பதாக அமைந்துள்ளது. பார்ட்டி கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லாமல் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











