twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா.. பெப்சி அமைப்புக்கு நடிகை கங்கனா ரனவத் நிதியுதவி.. 'தலைவி' தொழிலாளர்களுக்கும் அறிவிப்பு!

    By
    |

    சென்னை: பெப்சி அமைக்கும் தலைவி பட தொழிலாளர்களுக்கு நடிகை கங்கனா நிதியுதவி அளித்துள்ளார்.

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அனுஷ்கா ஷர்மாவின் அடுத்த அதிரடி.. அமேசான் பிரைமில் வருது புதிய வெப்சீரிஸ்!அனுஷ்கா ஷர்மாவின் அடுத்த அதிரடி.. அமேசான் பிரைமில் வருது புதிய வெப்சீரிஸ்!

    ஊரடங்கு

    ஊரடங்கு

    அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மற்ற நாடுகளிலும் இந்த பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸிலன் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

    சினிமா தொழிலாளர்கள்

    சினிமா தொழிலாளர்கள்

    சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள் தங்களில் வீடுகளில் இருக்கின்றனர். தினசரி ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு நிதி திரட்டியது. தெலுங்கிலும் சினிமா தொழிலாளர்களுக்காக நிதி திரட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    நயன்தாரா

    நயன்தாரா

    கேரளாவிலும் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி திரட்டி வருகின்றனர். இதற்கு நடிகர்கள் உதவி வந்த நிலையில், கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள் உதவவில்லை என்று புகார் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து நயன்தாரா, காஜல் அகரவால் உள்ளிட்ட சில நடிகைகள் உதவி செய்தனர். தமன்னா, தெலுங்கு சினிமா அமைப்புக்கு மட்டும் ரூ.3 லட்சம் நிதி உதவி செய்தார்.

    நடிகை கங்கனா

    நடிகை கங்கனா

    இந்நிலையில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத், ரூ.10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். விஜய் இயக்கத்தில், அவர் ஜெயலலிதாவாக நடிக்கும் தலைவி படத்தில் பணிபுரியும் தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கியுள்ளார்.

    3 மொழிகளில்

    3 மொழிகளில்

    தலைவி படம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது. இதில், எம்.ஜி.ஆராக, அரவிந்த்சாமி நடிக்கிறார். அவர் மனைவி ஜானகி ராமசந்திரனாக மதுபாலா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

    English summary
    Actress Kanaga Ranaut has donated Rs.5 lakhs to FEFSI and also donated Rs.5 lakhs for daily wage workers of the Film Thalaivi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X