அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போன கனகா… மீண்டும் நடிக்க ஆசையாக இருப்பதாக வீடியோவில் பேச்சு !

சென்னை : மாங்குயிலே... பூங்குயிலே...என்ற பாடலை கேட்டதும் நினைவுக்கு வருவது கனகாதான். தமிழ் சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் இருந்த முன்னணி நடிகைகளில் கனகாவும் ஒருவர்.

ரஜினி, விஜய்காந்த், சரத்குமார்,கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா.

நீண்ட ஆண்டுகளாக திரையில் தன் முகத்தை காட்டாத கனகா தற்போது ஒரு வீடியோவில் மனம் விட்டு பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தேவிகாவின் மகள்

தேவிகாவின் மகள்

நடிகை கனகா 1973 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். மேலும், இவர் நடிகை தேவிகாவின் மகளும் ஆவார். இவருடைய தாய் தேவிகா ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி,சிவாஜி போன்ற நடிகர்களுடன் நடித்தவர். இவருடைய தாய் ஒரு சினிமா நடிகை என்பதால் இவருக்கு சினிமா துறையில் நுழைய ஈசியாக இருந்தது. இவருடைய தந்தை தேவதாஸ் ஆவார்.

கரகாட்டக்காரன்

கரகாட்டக்காரன்

1989ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் உருவான கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார். கிராமி கலை கரகாட்டத்திற்கு புத்துயிரைப் பெற்றுத்தந்தது. இந்த படம் 425 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. இதனால், கனகா தன் முதல் படத்திலேயே பெரிய அளவு ஸ்டார் ஆக மாறிவிட்டார்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் அவர்கள் பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் சினிமா துறையில் உள்ள ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக்,விஜயகாந்த்,சரத் குமார், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.

வீடியோவில் பேசிய கனகா

வீடியோவில் பேசிய கனகா

இந்த நிலையில், நீண்ட ஆண்டுகளாக திரையில் தன் முகத்தை காட்டாத கனகா தற்போது ஒரு வீடியோவில் மனம் விட்டு பேசி உள்ளார். அந்த வீடியோவில் மீண்டும் நடிக்க ஆசை இருக்கிறது என்றும், தான் திரைத்துறைக்கு வந்து 32வருஷம் ஆச்சு எனக்கு இப்போது 50 வயது ஆகிறது என்றார்.

எல்லாத்தையும் புதுசா கத்துக்கனும்

எல்லாத்தையும் புதுசா கத்துக்கனும்

தொடர்ந்து 10 வருடமாவது ஃபீல்டில் இருந்தால் மட்டும்தான் சமாளிக்க முடியும்,பல வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்ததால் எல்லாவற்றையுமே புதிதாக கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும், எல்லா விஷயமும்மாறி இருக்கு வித்தியாசமா இருக்கு, மேக்கப், சிகை அலங்காரம், டிரஸ், பேசுறது, சிரிக்கிறது எல்லாமே மாறி இருக்கு அவற்றை எல்லாம் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.சின்ன வயதில் ஒரு விஷயத்தை கற்றுகொள்வதற்கும் இப்போது கற்றுக்கொள்வதற்கும் நிறையை வித்தியாசம் இருக்கும் என்றார். மேலும், பலர் எதுக்கு இந்த வயசுல ஆசை என்றும் கேட்கலாம் என்றும் கனகா அந்த வீடியோவில் அழகாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X